அரசு மருத்துவமனையில் ரத்தம் தட்டுப்பாடு.. களமிறங்கிய விஜய் ரசிகர்கள்...

Feb 21, 2024 - 16:08
Feb 21, 2024 - 17:07
அரசு மருத்துவமனையில் ரத்தம் தட்டுப்பாடு.. களமிறங்கிய விஜய் ரசிகர்கள்...

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு மருத்துவமனையின் ரத்த வங்கியில் இருப்பு இல்லாததால், பற்றாக்குறை நிலவியதாக கூறப்படுகிறது. இதனால் விபத்து மற்றும் அறுவை சிகிச்சைக்கு அவ்வப்போது ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதால் தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் ரசிகர்கள் ரத்தம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தனர். இதையறிந்த 100-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

இதனால் அரசு மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் திருநள்ளாறு பகுதியில் உள்ள அரசு கட்டிடத்தில் ரத்த தானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் சீருடையில் இருந்த காவலர் தென்னரசு ரத்த தானம் வழங்கியது பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதனால் ரத்தம் வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் ரத்தத்தின் ரத்தங்களுக்கு மருத்துவர்கள் நன்றி தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow