விஜய் கொடுத்த விருந்து- நெகிழ்ந்து பாராட்டிய விவசாயிகள்
விவசாயிகளுக்கு பனையூரில் உள்ள தவெக அலுவககத்தில் சைவ உணவு பரிமாறப்பட்டது.
தவெக மாநாடு நடத்த நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விஜய் இன்று விருந்தளித்தார். இதனால் நெகிழ்ந்து போன விவசாயிகள் விஜய்க்கு நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன்பின்னர் கட்சி கொடி அறிமுகம், தவெக முதல் மாநில மாநாடு என அடுத்தடுத்து அரசியல் பிரவேசம் சூடிபிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து தவெக சார்பில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் அக்.27ம் தேதி தவெக முதல் மாநில மாநாடு மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் தமது கொள்கைத் தலைவர்கள் யார்? கட்சியின் கொள்கைகள் என்ன என்பது குறித்து அறிவித்தார்.
மேலும் தமது அரசியல் எதிரி யார் என்பது குறித்தும் பேசினார். இதில் பேசிய தவெக தலைவர் விஜய், ஆளும் திமுக அரசை கடுமையாக சாடி பேசினார். மேலும் நம்மை நம்பி வருபவர்களுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என கூறினார். இதன் மூலம் விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு விஜய் அழைப்பு விடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு விசிக தலைவர் திருமாவளன் மறுப்பு தெரிவித்தார்.
மேலும் தவெகவினர் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அதற்கான முழு தேர்தல் பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், தவெக மாநாட்டிற்கு வந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குறித்து தமிழ்நாடு உளவுத்துறை தகவல்களை சேகரித்ததாக தகவல் வெளியானது. இதன்மூலம் விஜய்க்கு உள்ள அரசியல் செல்வாக்கை சோதிக்கும் வகையில் இந்த தகவல்கள் சேகரிப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தவெக மாநாட்டிற்கு விக்கிரவாண்டியில் நிலம் கொடுத்த நில உரிமையாளர்கள் விவசாயிகள் என 31 குடும்பங்களைச் சேர்ந்த 130க்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். விஜய் சந்திப்பின் போது செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினர். இதனால் செல்போன்களை பேருந்திலேயே வைத்துவிட்டு வர தவெக தலைமையால் அறிவுறுத்தப்பட்டது. பின்னர் பனையூரில் தவெக அலுவலகத்தில் சாதம், வடை , பாயாசம் பொரியல் , சாம்பார் , வத்தக்குழம்பு , ரசம் , மோர், அப்பளம் என சைவ உணவு பரிமாறப்பட்டது. நீலாங்கரை வீட்டில் இருந்து மதியம் புறப்பட்டு கட்சி அலுவலகத்திற்கு வந்த விஜய்க்கு தவெக தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மாநாட்டுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு சால்வை அணிவித்து கெளரவித்ததாக கூறப்படுகிறது.
What's Your Reaction?