LLR எடுக்க இனி ரூ.60 போதும்...! புரோக்கர்களுக்கு ஆப்பு வைத்த போக்குவரத்து ஆணையம்.! 

LLR-க்கு வெறும் ரூ.60 போதும்... இ-சேவை மையத்திலேயே பெறலாம்...! 

Mar 13, 2024 - 11:58
LLR எடுக்க இனி ரூ.60 போதும்...! புரோக்கர்களுக்கு ஆப்பு வைத்த போக்குவரத்து ஆணையம்.! 

இனி இ-சேவை மையங்கள் மூலம் LLR-ஐ விண்ணப்பிக்கும் முறையை போக்குவரத்து ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்தி அதற்கான  வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது போக்குவரத்து ஆணையம். 

ஓட்டுநர் பழகுநர் உரிமம்.... அதவாது ஒருவர் வாகனங்களை இயக்கும் முன் உரிமம் பெறுவது கட்டாயம் என்பது உலகம் முழுவதும் இருக்கும் நடைமுறை ஆகும். சாலைகளில் வாகனங்களை இயக்கி பழக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளும் உரிமமே LLR எனப்படும் ஓட்டுநர் பழகுநர் உரிமம் ஆகும். இதற்கு முன்னதாக, LLR-ஐ ஓட்டுநர் பள்ளிகள் வாயிலாகவோ, இடைத்தரகர்கள் மூலமாகவோ அல்லது இணைய மையங்கள் மூலமாகவோ மக்கள் பெற்று வந்தனர். இதில் நேர விரையமும், பணமும் அதிகமாக வீணானது. குறிப்பாக LLR பெற இடைத்தரகர்கள்  ரூ.500- ரூ.1000 என வாங்கி வந்தனர். ஆனால் LLR பெற அரசு நிர்ணயிக்கும் தொகை குறைவே ஆகும்.  இதனால் மக்களின் பணம் இடைத்தரகர்களுக்கே சென்றது. 

இந்நிலையில், LLR பெறும் முறையை எளிமைப்படுத்திய தமிழக போக்குவரத்து ஆணையம், இனி இ-சேவை மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்திலுள்ள 55,000 இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அத்துடன் ஓட்டுநர் உரிமம் பெறுவது முதல் அதில் மாற்றங்கள் செய்வது , பெர்மீட் பெறுவது வரை பல சேவைகளை இ-சேவையிலேயே பெறலாம் என அறிவித்துள்ளது. அத்துடன் ரூ.60 செலுத்தி அதனை பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்து லைசன்ஸ் பெற திட்டமிட்டுள்ள குடும்பத்தினருக்கு இது நற்செய்தியாக அமைந்திருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow