விஜய் டி.வி.யின் புதிய சீரியல்

திருமணத்திற்குப் பிறகு இவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது மற்றும் ஆணாதிக்க வேலனின் குடும்பத்தில் சக்தியின் பயணம் என்ன என்பதை சுவாரஸ்யமாக இந்தக்கதை சொல்கிறது.

Dec 2, 2023 - 12:06
Dec 2, 2023 - 12:19
விஜய் டி.வி.யின் புதிய சீரியல்

சக்திவேல் ‘தீயாய் ஒரு தீராக்காதல்’என்ற புத்தம் புதிய மெகா தொடர் டிச.4ம் தேதி முதல் திங்கள் - சனி வரை மதியம் 1.30 மணிக்கு விஜய் டி.வியில் ஒளிப்பரப்பாக உள்ளது.

விஜய் டிவி சக்திவேல் என்ற புத்தம் புதிய மெகா தொடரை வரும் திங்கள் முதல் துவக்கவுள்ளது.சக்திவேல் - தீயாய் ஒரு தீராக்காதல் கதை ஒரு சுவாரஸ்யமான காதல் நிறைந்த விறுவிறுப்பான குடும்பக்கதை.

சக்தி நன்கு படித்த ஒரு பேராசிரியை.பணம் மற்றும் அதிகாரம் கொண்ட குடும்பத்தில் பிறந்து சுற்றிக்கொண்டிருக்கும் முரட்டுக்குணம் கொண்ட வேலன் சக்தியை கண்மூடித்தனமாக காதலிக்கிறான்.அவனது காதலை அறியாத சக்தி, அடிக்கடி பிரச்சனையில் சிக்கி, தான் அவனை காதலிக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்காக தன் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு சம்மதிக்கிறாள்.அவளது நிச்சயத்தன்று சக்தியின் மாப்பிள்ளையை வேலன் மிரட்டி, திருமணத்திலிருந்து பின்வாங்கும்படி வற்புறுத்தும்போது விஷயங்கள் பெரிய திருப்பத்தை எடுக்கின்றன. 

இதற்கு இணையாக, வேலனின் குடும்பத்தினர் வேலனை சக்தியிடமிருந்து பிரிக்க முயற்சிக்கின்றனர். சக்தி வேலனைத் தடுக்க முடியாது என்பதை உணர்ந்து, இந்தத் திருமணத்திற்காக அவனை வருந்தச் செய்ய அவனைத் திருமணம் செய்து கொள்கிறான்.

திருமணத்திற்குப் பிறகு இவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது மற்றும் ஆணாதிக்க வேலனின் குடும்பத்தில் சக்தியின் பயணம் என்ன என்பதை சுவாரஸ்யமாக இந்தக்கதை சொல்கிறது.

இதில் சக்தியாக அஞ்சலி, மெய்யநாதன் கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், கஸ்தூரியாக குழந்தை மகிழ்ச்சி, சேரனாக மெர்வின், பொற்செல்வியாக மஹிமா, ஜெகதாம்பாளாக ரேவதி,கவுரியாக ஷாலினி, வேலனாக பிரவீன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow