மாணவி பாலியல் பலாத்காரம்- தொழிலாளி கைது

மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Dec 2, 2023 - 12:17
Dec 2, 2023 - 16:34
மாணவி பாலியல் பலாத்காரம்- தொழிலாளி கைது

குமரி தக்கலை அருகே மகள் முறையுள்ள மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம், தக்கலை அருகே மூலச்சல் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் நாகர்கோவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உறவினர்கள் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பம் அடைந்து கருகலைந்து இருந்தது தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மாணவியிடம் கேட்டபோது அவர்களது உறவினரும், மாணவிக்கு சித்தப்பா முறை வருபவருமான ஜெகதீஷ் என்பவர் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஜெகதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow