பெண் நோயாளியிடம் அத்துமீறல்.. மருத்துவ ஊழியர் மீது பரபரப்பு புகார்..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில், பரிசோதனைக்குச் சென்ற போது ஆபாசமாக பேசியதாக மருத்துவ ஊழியர் மீது பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவில்பட்டியைச் சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர், கணவர் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாத தமது குழந்தையை, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது, தோல் பிரச்னைக்காக அவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்காக, 12-ம் அறைக்கு சென்ற போது ஸ்டீபன் என்ற ஊழியர், தேவையில்லாத கேள்விகளை கேட்டதாகவும், அந்தரங்கக் கேள்விகளை கேட்டு தவறான எண்ணத்துடன் பார்த்ததாகவும் அந்த பெண் பரபரப்பு புகார் அளித்தார்.
ஆபாசமாக பேசியதை கண்டித்ததால், தம்மை வேண்டுமென்ற ஸ்டீபன் காக்க வைத்ததாகவும், இதனால் தாம் அழுதபடியே வெளியே சென்றதாக அந்த பெண் கூறினார். தம்மிடம் நடந்தது போல், ஸ்டீபன் மற்ற பெண்களிடமும் நடத்திருப்பது தெரியவந்ததால், துணிச்சலாக அவர் மீது புகார் அளித்தாக கூறிய அந்த பெண், இதுதொடர்பாக மருத்துவ நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த பெண் வேதனையாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஸ்டீபன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட பணியிடங்களில் பெண்களின் தயக்கத்தைப் போக்கி அவர்கள் எளிதில் அணுகும் வகையில் பெண் ஊழியர்களையே பணியமர்த்த வேண்டும் எனவும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?