ஐ.டி. ஊழியர் உட்பட பலரிடம் ரூ.6 கோடி வரை மோசடி... வங்கி மேலாளர் கைது...
மாதா மாதம் பங்குத்தொகை கிடைக்கு என்றுகூறி பலரை ஏமாற்றி 6 கோடி ரூபாய் வரை மோசடி செய்த மதுரையைச் சேர்ந்த வங்கி மேலாளர் ஓராண்டுக்குப் பிறகு திருவள்ளூர் போலீஸார் கைது செய்தனர்.
மாதா மாதம் பங்குத்தொகை கிடைக்கு என்றுகூறி பலரை ஏமாற்றி 6 கோடி ரூபாய் வரை மோசடி செய்த மதுரையைச் சேர்ந்த வங்கி மேலாளர் ஓராண்டுக்குப் பிறகு திருவள்ளூர் போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மணவாள நகரைச் சேர்ந்தவர் கிரிபிரசாத்ராவ். இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். 2019-ம் ஆண்டு தனது பள்ளி பெண் நண்பர் மூலம் மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற வங்கி மேலாளர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. ராஜ்குமார் அப்போது வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார், பல்வேறு வங்கிகளிலும் பணிபுரிந்துள்ளார்.
பி.எம்.எஸ். என்ற நிறுவனத்தில் பணம் செலுத்தினால் மாதா மாதம் பங்குத்தொகை அதிகமாகக் கிடைக்கும் என்றும் எப்போது கேட்டாலும் முழு பணத்தையும் திருப்பித் தருவதாக கிரிபிரசாத்ராவிடம் ராஜ்குமார் கூறியுள்ளார். இதை நம்பிய கிரிபிரசாத்ராவ், 2021-ம் ஆண்டு 48 லட்சம் ரூபாயும், 2022-ம் ஆண்டு 5 லட்சம் ரூபாயும், 2023-ம் ஆண்டும் 60.30 லட்சம் ரூபாயும் வங்கி மூலம் கொடுத்துள்ளார். மொத்தமாக 1 கோடியே 13 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.
2023-ம் ஆண்டு கிரிபிரசாத்ராவ், தான் கொடுத்த பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது வங்கியில் பணிபுரிந்த ராஜ்குமார், பணத்தை உடனடியாகத் தருவதாகக் கூறிவிட்டு தலைமறைவானார். அவரது மொபைல்போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த கிரிபிரசாத்ராவும் அவரது மனைவியும், 2023-ம் ஆண்டு திருவள்ளூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீதும் புகார் அளித்தார்.
தற்போது திருவேற்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு ராஜ்குமார் வந்து போவதை தெரிந்துகொண்ட போலீஸார், டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையில் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ராஜ்குமார் இதேபோல பலரையும் ஏமாற்றி சுமார் 6 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
What's Your Reaction?