"சூரியனை குழந்தைக்கு கூட பிடிக்கவில்லை".. திண்டுக்கல் சீனிவாசன் கலகல..

"சூரியனை குழந்தைக்கு கூட பிடிக்கவில்லை".. திண்டுக்கல் சீனிவாசன் கலகல..

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரப்புரையின் போது குழந்தைக்கு பெயர் வைத்துவிட்டு பேசிய கருத்து, சுற்றியிருந்தவர்களிடம் நகைப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் SDPI மாநிலத் தலைவர் முகமது முபாரக் போட்டியிடுகிறார். அவருக்காக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

அப்போது குழந்தைக்கு பெயர் வைக்க தம்பதி கேட்டதையடுத்து குழந்தையை கையில் வாங்கிக்கொண்ட திண்டுக்கல் சீனிவாசன், குழந்தை ஆணா, பெண்ணா என கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்னர் குழந்தைக்கு ராமச்சந்திரன் என அவர் பெயர் வைத்தார். இந்நிலையில், வெயில் கண்ணில் பட்டதும் குழந்தை லேசாக அழ, உடனே திண்டுக்கல் சீனிவாசன், "இங்க பாருங்க சூரியன பார்க்க குழந்தைக்கு கூட பிடிக்கல. இரட்டை இலையை பார்த்து மகிழ்ச்சியாக இருக்குது" என கலகலப்பாக கூறினார். இதனைக் கேட்டு சுற்றியிருந்தோர் புன்னகைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow