Vishal: “வரலட்சுமி எங்கிருந்தாலும் வாழ்க… அது யார் கொடுத்த தைரியம்..?” ஃபயர் மோடில் விஷால்!

விஷால் நடித்துள்ள ரத்னம் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதனையடுத்து ரத்னம் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட விஷால், வரலட்சுமி சரத்குமார் பற்றியும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் குறித்தும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Apr 16, 2024 - 12:41
Vishal: “வரலட்சுமி எங்கிருந்தாலும் வாழ்க… அது யார் கொடுத்த தைரியம்..?” ஃபயர் மோடில் விஷால்!

சென்னை: மார்க் ஆண்டனி வெற்றிக்குப் பின்னர் விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ரத்னம். தாமிரபரணி, பூஜை படங்களைத் தொடர்ந்து விஷால் – இயக்குநர் ஹரி கூட்டணி ரத்னம் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. விஷால் ஜோடியாக ப்ரியா பவானி சங்கரும் முக்கியமான கேரக்டர்களில் சமுத்திரகனி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரத்னம் படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது. ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியான இந்த ட்ரெய்லர் நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.  

ரத்னம் அடுத்த வாரம் 26ம் தேதி ரிலீஸ் ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாகிவிட்டார் விஷால். அப்போது பேசிய விஷால், வரலட்சுமி சரத்குமார் குறித்து மனம் திறந்துள்ளார். வரலட்சுமியை நினைத்து ரொம்பவே சந்தோஷப்படுகிறேன். தமிழை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் அவருக்கு ஒரு பெரிய மார்க்கெட் உள்ளது. திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பை பார்த்து அசந்து போனேன். அதேபோல் சமீபத்தில் ஹனுமன் படத்தில் வரலட்சுமியின் நடிப்பை பார்த்தும் வியந்துவிட்டேன். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தார்.  

வரலட்சுமி தன்னுடைய சினிமா கேரியரை தாண்டி வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். விஷாலும் வரலட்சுமியும் சில ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்ததாக சொல்லப்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரலட்சுமிக்கு தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனால் வரலட்சுமியை ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்பதாக மறைமுகமாக வாழ்த்தியுள்ளார் விஷால்.  

இன்னொருபக்கம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மீதும் கடுமையாக விமர்சனம் வைத்துள்ளார் அவர். விஷாலின் நெருங்கிய நண்பரான உதயநிதியால் தொடங்கப்பட்டது தான் இந்நிறுவனம். தற்போது அரசியலில் பிஸியாகிவிட்ட உதயநிதி, ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் இருந்து விலகிவிட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால், ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர், தமிழ் சினிமாவை தனது கன்ட்ரோலில் வைத்திருக்க முயல்வதாகவும், படங்களின் ரிலீஸ் தேதியை அவர்கள் தான் தீர்மானிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தனது மார்க் ஆண்டனி படத்துக்கு பிரச்சினை வந்தது போல, ரத்னம் மூவிக்கும் இடையூறுகள் ஏற்படலாம் எனக் கூறியுள்ளார். மேலும், உதயநிதியிடம் நான் அறிமுகப்படுத்திய நபர் இப்போது எனக்கே ஆர்டர் போடுகிறார் எனவும் வேதனயாக தெரிவித்துள்ளார். ரெட் ஜெயன்ட் மீது விஷால் புகார் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேட்டி கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow