தேர்தல் பரிசுப்பொருட்கள்.. பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம்.. எத்தனை கோடி தெரியுமா? தமிழ்நாட்டில் எவ்வளவு?

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு ஏப்ரல் 13 ஆம் தேதி இரவு 9.53 மணி வரை மட்டும் இந்தியாவில் 4658 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப்பணம், பரிசுப்பொருட்கள், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Apr 16, 2024 - 12:42
தேர்தல் பரிசுப்பொருட்கள்.. பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம்.. எத்தனை கோடி தெரியுமா? தமிழ்நாட்டில் எவ்வளவு?

இந்தியாவில் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருக்கிறது. வரும் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலை நேர்மையாக நடத்தும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்குக்கு பணம் வாங்குவதும், பணம் தருவதும் சட்டப்படி குற்றம் என்ற போதிலும் வாக்காளர்களை கவர பல அரசியல் கட்சிகளும் பண பலத்தை காட்டி வருகின்றன. பல தொகுதிகளில் வாக்காளர்களுக்கு மறைமுகமாக பணம் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஆங்காங்கே தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், காவலர்கள், தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர்  சோதனைகளை  தீவிரப்படுத்தியுள்ளனர். 
அந்த வகையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு ஏப்ரல் 13 ஆம் தேதி  இரவு 9.53 மணி வரை மட்டும் இந்தியாவில் 4658 கோடி ரூபாய் மதிப்புள்ள  ரொக்கப்பணம், பரிசுப்பொருட்கள், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 778 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் 605 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 53 .58 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப்பணம்,  4.43 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்களும், 293 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள்,  விலை மதிப்பு மிக்க உலோகங்கள் 78 ரூபாயும் ,வாக்காளர்களுக்கு வழங்க எடுத்துச்செல்லப்பட்ட 31  கோடி ரூபாய் மதிப்புள்ள இலவச பொருட்கள்  என மொத்தமாக  460.84 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வரும் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனல் பறக்கும் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. அந்தந்த தொகுதிகளுக்கு தொடர்புடையவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow