பாஜகவுடன் கூட்டணி அமைத்த த.மா.கா...ஜி.கே.வாசனின் யூகம் என்ன?
பாஜக ஆட்சி தொடர்ந்தால், பொருளாதார ரீதியாக நாடு முன்னேறும் - வளர்ச்சி தொடரும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி சில வாரங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தொகுதிப்பங்கீடு, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளார். எந்தக் கட்சி முடிவிலும் தமாகா தலையிடாது என தெரிவித்த அவர், தனிப்பட்ட முறையில் அதிமுக தலைவர்களை சந்தித்துப் பேசியதாகக் கூறினார்.
நாடாளுமன்றத்தேர்தலில் சைக்கிள் சின்னத்திலேயே போட்டியிட விரும்புவதாகவும், இருப்பினும் த.மா.காவுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம் எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து திருப்பூர் பல்லடத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் 'என் மண், என் மக்கள் யாத்திரை' நிறைவு விழாவில் பங்கேற்பதாகவும் அவர் அறிவித்தார்.
பாஜக கூட்டணியில் நம்பிக்கை தரும் கட்சியாக த.மா.கா செயல்படும் எனவும் பாஜக ஆட்சி தொடர்ந்தால், பொருளாதார ரீதியாக நாடு முன்னேறும் - வளர்ச்சி தொடரும் - ஏழ்மை குறையும் எனவும் அவர் கூறினார்.
What's Your Reaction?