தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்
தமிழக வெற்றிக் கழகத்திற்கு சட்டமன்ற தேர்தலில் விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சி துவங்கியதுமே தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என அறிவித்தார் விஜய். ஆனால் அப்படி சொல்லியும் இப்போது வரை எந்த கட்சியும் தவெக பக்கம் செல்லவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா கட்சிகளும் திமுக மற்றும் அதிமுக என்ற இரு கட்சிகளிலும் கூட்டணி அமைத்துவிட்டன. எனவே,
வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக என நான்கு முனை போட்டிகள் உருவாகி உள்ளது. இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவுள்ள தவெக கட்சிக்கு சின்னம் ஒதுக்கக்கோரி, அக்கட்சியின் நிர்வாகிகள் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் கடந்த நவம்பர் மாதம் மனு அளித்தனர். தவெக கொடுத்துள்ள பொதுவான 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலில் ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில் சின்னம் இடம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் கேட்ட போது, “வேட்டைக்காரன் படத்தில் விஜய் ஆட்டோ ஓட்டுவார். பைரவா படத்தில் விஜய் கிரிக்கெட் விளையாடுவார். பிகில் படத்தில் விஜய் கபடி பயிற்சியாளராக விசிலுடன் இருப்பார். அதேபோல் பிகில் படத்தில் விஜய் நடித்துள்ளார். கோட் படத்திலும் விசில் அடிப்பது போன்ற பாடல் காட்சி உண்டு.
இந்த நான்கு சின்னமும் விஜய்க்கு மிகவும் பிடித்த சின்னமாக உள்ளது. இதில், ஏதாவது ஒரு சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கினால், சின்னத்தை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்” என்றனர்.
இந்நிலையில், தவெகவிற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே போன்று, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?

