சட்டசபை தேர்தல் "என்ன செய்றதுனு தெரியல": 25-ம் தேதி தவெக செயல்வீரர்களிடம் ஆலோசிக்க விஜய் முடிவு 

சட்டமன்ற தேர்தலில் பெரிய கட்சிகள் எதுவும் கூட்டணிக்கு வராத நிலையில், அடுத்த என்ன செய்வது என 25-ம் தேதி  செயல்வீரர்களிடம் ஆலோசனை நடத்த தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். 

சட்டசபை தேர்தல் "என்ன செய்றதுனு தெரியல": 25-ம் தேதி தவெக செயல்வீரர்களிடம் ஆலோசிக்க விஜய் முடிவு 
25-ம் தேதி தவெக செயல்வீரர்களிடம் ஆலோசிக்க விஜய் முடிவு 

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகிறது. கடந்த சில நாட்களாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் தேர்தல் பிரசார குழு கூட்டங்கள் நடந்து முடிந்தன.

ஜனநாயகன் பட விவகாரம், சிபிஐ விசாரணை என்று தன்னை சுற்றிய விஷயங்களால் பெரிய அளவில் கருத்து எதுவும் தெரிவிக்காமல் விஜய் அமைதி காத்து வருகிறது. அதே நேரம் கூட்டணி ஆட்சிக்கு விஜய் அழைப்பு விடுத்து இருந்தார். ஆனால் எந்த கட்சியும் தவெகவுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை.

இந்த நிலையில், வருகிற 25-ந்தேதி விஜய் தலைமையில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வரும் 25-ம் தேதி (25.01.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட அளவிலான கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு புஸ்ஸிஆனந்த் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow