கமல்ஹாசனின் ‘அந்த’ 2 நிபந்தனைகளுக்கு உட்பட்டதா.. திமுக?

Feb 2, 2024 - 11:41
Feb 2, 2024 - 12:07
கமல்ஹாசனின்  ‘அந்த’  2 நிபந்தனைகளுக்கு உட்பட்டதா.. திமுக?

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெறுகிறது மக்கள் நீதி மய்யம்; திமுக கூட்டணியில் கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகளை கேட்க மக்கள் நீதி மய்யம் முடிவு..!

நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஆயுத்தமாகி வரும் இந்த சூழலில், பல்வேறு கட்சிகள் தங்களுக்கான கூட்டணி குறித்து  ஆலோசித்து வருகின்றன.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்  கடந்த ஜனவரி 23-ம் தேதி நடைபெற்றது.  அந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து ஆலோசிக்கும்போது தங்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க 2 நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக,... 

அதாவது:

1. தமிழ்நாட்டு வள்ர்ச்சியிலும், தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் எவ்வித சமரசமும் அனுமதிக்கப்படாது எனவும்,

2. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளுடனும் ஒத்துப்போகிறவர்களுடன் மட்டும் தான் கூட்டணி  அமையும்  எனவும் கூறப்பட்டது.

அந்த 2 நிபந்தனைகளுக்கும் பிற கட்சிகள்  உடன்படவில்லையென்றால், நாடாளுமன்றத்தேர்தலில்  மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடவும் தயங்காது என  கூறப்பட்டது.  

இன்னிலையில் தற்போது வருகிற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கட்சியுடன்  மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

மேலும், நாடாளுமன்றத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டது. அதோடு, கோவை தொகுதி  மற்றும் தென் சென்னை தொகுதிகளை  மநீம கட்சி கேட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஏற்கனவே மக்கள் நீதி மய்யத்தின் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதன்மூலம் கூட்டணிக்கான முடிவை அப்போதே எடுத்ததாக விமர்சிக்கப்பட்டது. 

திமுக கட்சியில் தற்போது கூட்டணி குறித்தும் தொகுதிப்பங்கீடு குறித்தும்  பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில்,  காங்கிரசுடன் ஏற்கனவே முதற்கட்ட பேச்சுவார்த்தை  முடிந்த நிலையில் தற்போது மதிமுக மற்றும் பிற கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் இதுகுறித்து நாளை ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இந்த கூட்டணி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டாலும்,  இன்னும் திமுக சார்பில் இதுபற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. 

இதற்கிடையில் ஒரு பேட்டியொன்றில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இருக்குமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக பொருளாளர் டி. ஆர். பாலு கூறியதாவது: "தேர்தலில் போட்டியிட இடம் கேட்காமல் யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம்" என பதிலளித்திருந்தார். 

கோவை தொகுதியை  மநீம கேட்கவிருப்பதாக  கூறப்படும் சூழலில் இடம் கேட்பவர்கள் கூட்டணிக்கு வர வாய்பில்லை என்பது போல டி.ஆர்.பாலு கூறியிருப்பது, மறைமுகமாக மக்கள் நீதி மய்யத்திற்கு கூட்டணியில் இல்லை என கூறுவதுபோல அமைகிறது. இந்த பதில் மநீம கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.மேலும், பிப்ரவரி 4 ம் தேதி கோவை மண்டல நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட மக்கள் நீதி மய்யம் முடிவு செய்திருக்கிறது.  

மக்கள் நீதி மய்யத்தின் அந்த 2 நிபந்தனைகளுக்கு திமுக இசைவு காட்டியதா? அல்லது திமுக-வின் நிபந்தனைக்கு  மக்கள் நீதி மய்யம் ஒத்துப்போகிறதா ,.. என்பதே இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் ஒன்று.

இதையும்  படிக்க  |  புதிய முதல்வரான ‘ஜார்க்கண்ட் டைகர்’.. யார் இந்த சம்பாய் சோரன் ?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow