விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டது இதனால் தான்?- பிரேமலதா விளக்கம்

ஜெயலலிதா தான் என் ரோல் மாடல்.

Dec 16, 2023 - 21:59
விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டது இதனால் தான்?- பிரேமலதா விளக்கம்

கேப்டன் யாரை எல்லாம் நம்பினாரோ அவர்கள் எல்லாம் துரோகம் செய்தனர் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா பொறுப்பேற்ற நிலையில், சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செய்தார்.

இதைத்தொடர்ந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2011ம் ஆண்டு வரை தேமுதிக யாருடன் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டது. தேமுதிக தனியாக போட்டியிடும்போது கட்சியின் வளர்ச்சி, சக்தி அனைவருக்கும் தெரியவந்தது.

கேப்டன் யாரை எல்லாம் நம்பினாரோ, யாருக்கு எல்லாம் எம்.எல்.ஏ சீட் கொடுத்தாரோ, அவர்கள் எல்லோரும் துரோகம் செய்தனர்.அதனால்  ஏற்பட்ட மன உளைச்சலில் அவரது உடல் நலமும் பாதிக்கப்பட்டது.தேமுதிக பொதுச்செயலாளராக எனக்கு அவசரமாக பதவி வழங்கப்படவில்லை. ஓராண்டுக்கு முன்பே கூறியிருந்தேன். அரசியலில் பெண்கள் இருப்பதே சவாலான ஒன்றுதான்.பெண்கள் அரசியலில் சாதிப்பது கடினம்.

அரசியலில் ரோல் மாடல் பற்றி கேட்டால் இந்திராகாந்தி, மம்தா பானர்ஜி போன்ற பலரை சொல்லலாம். ஆனால் அவர்களை எல்லாம் பார்ததுது இல்லை. பழகியது இல்லை.ஆகையால் ஜெயலலிதா தான் என் ரோல் மாடல். எனக்கு அவருடைய தன்னம்பிக்கையும், தைரியமும் மிகவும் பிடிக்கும். தேமுதிக தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமில்லாமல், அன்னையாகவும் இருந்து வருகிறேன்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow