தஞ்சாவூரில் ரூ.1.89 கோடி மதிப்பில் முதலீட்டாளர்களை ஏமாற்றிய வழக்கில் ஒருவர் கைது
மதுரை கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூரில் 1 கோடியே 89 லட்சம் மதிப்பில் முதலீட்டாளர்களை ஏமாற்றிய வழக்கில் ஒருவர் கைது செய்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சியை தலைமை இடமாகக்கொண்டு தஞ்சாவூர், கும்பகோணம், நாமக்கல் ஆகிய இடங்களில் இயங்கி வந்த சங்கமம் பெனிபிட் ஃபண்ட் என்ற நிறுவனம் முதலீட்டாளர்களை ஏமாற்றியதின்பேரில் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 2019 தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்து வரும் தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் விசாரணை செய்து அதில் சம்பந்தப்பட்ட பார்த்திபன், சுகந்தா, தேவி, ராஜேஷ், ராமதாஸ், சரவணன் ராஜேஸ்வரி ஆகியோர்களை ஏற்கனவே கைது செய்து விசாரணை செய்து வந்த நிலையில், தற்போது அந்த நிறுவனத்தின் பங்குதாரர் திருச்சி காட்டூரை சேர்ந்த தண்ணீர்மலை(26) என்பவரை தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து முதலீட்டாளர்களின் பணம் குறித்து விசாரணை செய்து அவரை மதுரை கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். முதலீட்டாளர்கள் சுமார் 20 பேர் ஏமாற்றப்பட்ட தொகை ஒரு கோடியே 89 லட்சம் ஆகும்.
What's Your Reaction?