கிறிஸ்துமஸ் பண்டிகை-குமரியில் 40 லட்சம் செலவில் ஜெருசலேம் வடிவில் பிரம்மாண்டமான குடில்
குடிலினுள் வைக்கப்பட வேண்டிய சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை ஏராளமான கலைஞர்களை கொண்டு வடிவமைத்தும் வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை வரவேற்கும் விதமாக குமரி மாவட்டம் பாலப்பள்ளம் பகுதியில் 40 லட்சம் செலவில் ஜெருசலேம் வடிவில் பிரம்மாண்டமாக குடில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்டம் பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பிரம்மாண்ட குடில் அமைத்து கண்காட்சி நடத்துவது வழக்கம்.
இதனை காண குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள். இதன்படி இந்த ஆண்டுக்கான குடில் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு அமைக்கப்படும் குடில் ஜெருசலேம் நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆலயத்தின் வடிவில் 85 அடி நீளமும் 185 அடி உயரத்திலும் 40 லட்சம் செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரப்படுகிறது.
மேலும் குடிலினுள் வைக்கப்பட வேண்டிய சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை ஏராளமான கலைஞர்களை கொண்டு வடிவமைத்தும் வருகின்றனர்.சுமார் ஒரு மாத காலமாக நடந்து வரும் பணி வருகிற 22ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு 23ம் தேதி முதல் வருகிற புத்தாண்டு நாள் வரை கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?