அடேங்கப்பா ..! இவ்வளவு வசூலா …!! நவம்பரில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 45,976 கோடி 

நவம்பர் மாதத்தில் ரூ 45 ஆயிரத்து 976 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல்.

அடேங்கப்பா ..! இவ்வளவு வசூலா …!! நவம்பரில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 45,976 கோடி 
GST tax collection

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017 ஜூலை மாதத்தில் அறிமுகமானது. அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதியன்று, முந்தைய மாதத்தில் வசூலான வரித்தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இவ்வருடம் ஜிஎஸ்டி அறிமுகமாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 22-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்த இந்த சீர்த்திருத்த நடவடிக்கையால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்தது. இதனால் மின்னணு சாதனங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.1.69 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் ரூ.1.70 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 0.7 சதவீதம் அதிகம்.

மொத்த உள்நாட்டு வருவாய் 2.3% குறைந்து ரூ.1.24 லட்சம் கோடியாக இருந்தது. செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்த 375 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. பொருட்களின் இறக்குமதியிலிருந்து கிடைக்கும் வருவாய் நவம்பரில் 10.2% அதிகரித்து ரூ.45,976 கோடியாக உள்ளது." என்று கூறப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow