எந்தெந்த மாநிலங்களில் எப்போது தேர்தல்...? விரிவான புள்ளிவிவரம்...

வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

Mar 16, 2024 - 19:51
எந்தெந்த மாநிலங்களில் எப்போது தேர்தல்...? விரிவான புள்ளிவிவரம்...

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

அதன்படி வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு:

1. அருணாச்சல பிரதேசம் 2 தொகுதிகள்
2. அஸ்ஸாம் 5 தொகுதிகள்
3. பீகார் 4 தொகுதிகள்
4. சத்தீஸ்கர் 1 தொகுதி
 5. மத்தியப் பிரதேசம் 6 தொகுதிகள்
6. மஹாராஷ்டிரா 5 தொகுதிகள்
7.  மணிப்பூர் 2 தொகுதிகள்
8. மேகாலயா 2 தொகுதிகள்
9. மிசோரம் 1 தொகுதி
10. நாகாலாந்து 1 தொகுதிகள்
11. ராஜஸ்தான் 12தொகுதிகள்
12. சிக்கிம் 1 தொகுதி
13. தமிழ்நாடு 39 தொகுதிகள்
14. திரிபுரா 1 தொகுதி
15. உத்தரப்பிரதேசம் 8 தொகுதிகள்
16. உத்தரகாண்ட் 5 தொகுதிகள்
17. மேற்கு வங்காளம் 3 தொகுதிகள்
18. அந்தமான் நிகோபார் 1 தொகுதி
19. ஜம்மு-காஷ்மீர் 1 தொகுதி
20. லட்சத்தீவு 1 தொகுதி
21. புதுச்சேரி 1 தொகுதி

இரண்டாம் கட்டமாக 89 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு:

1. அசாம் 5 தொகுதிகள்
2. பீகார் 5 தொகுதிகள்
3. சத்தீஸ்கர் 3 தொகுதிகள்
4. கர்நாடகா 14 தொகுதிகள்
5. கேரளா 20 தொகுதிகள்
6. மத்தியப் பிரதேசம் 7 தொகுதிகள்
7. மஹாராஷ்டிரா 8 தொகுதிகள்
8. மணிப்பூர் 1 தொகுதி
9. ராஜஸ்தான் 13 தொகுதி
10. திரிப்புரா 1 தொகுதி
11. உத்தரப்பிரதேசம் 8 தொகுதிகள்
12. மேற்கு வங்காளம் 3 தொகுதிகள்
13. ஜம்மு-காஷ்மீர் 1 தொகுதி

மூன்றாம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு மே 7 ஆம் தேதி வாக்குப்பதிவு:

1. அசாம் 4 தொகுதிகள்
2. பீகார் 5 தொகுதிகள்
3. சத்தீஸ்கர் 7 தொகுதிகள்
4. கோவா 2 தொகுதிகள்
5. குஜராத் 26 தொகுதிகள்
6. கர்நாடகம் 14 தொகுதிகள்
7. மத்தியப்பிரதேசம் 8 தொகுதிகள்
8. மஹாராஷ்டிரா 11 தொகுதிகள்
9. உத்தரப்பிரதேசம் 10 தொகுதிகள்
10. மேற்கு வங்காளம் 4 தொகுதிகள்
11. தாத்ரா மற்றும் நகர் ஹாவேலி மற்றும் டையூ மற்றும் டாமன் 2 தொகுதிகள்
12. ஜம்மு-காஷ்மீர் 1 தொகுதி

நான்காம் கட்டமாக 96 தொகுதிகளுக்கு மே 13 ஆம் தேதி வாக்குப்பதிவு:

1. ஆந்திரப்பிரதேசம் 25 தொகுதிகள்
2. பீகார் 5 தொகுதிகள்
3. ஜார்கண்ட் 4 தொகுதிகள் 
4. மத்தியப்பிரதேசம் 8 தொகுதிகள்
5. மஹாராஷ்டிரா 11 தொகுதிகள்
6. ஒடிசா 4 தொகுதிகள்
7. தெலங்கானா 17 தொகுதிகள்
8. உத்தரப்பிரதேசம் 13 தொகுதிகள்
9. மேற்கு வங்காளம் 8 தொகுதிகள்
10. ஜம்மு-காஷ்மீர் 1 தொகுதி

ஐந்தாம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20 ஆம் தேதி வாக்குப்பதிவு:

1. பீகார் 5 தொகுதிகள்
2. ஜார்கண்ட் 4 தொகுதிகள்
3. மஹாராஷ்டிரா 13 தொகுதிகள்
4. ஒடிசா 5 தொகுதிகள்
5. உத்தரப்பிரதேசம்  14 தொகுதிகள்
6. மேற்கு வங்காளம் 7 தொகுதிகள்
7. ஜம்மு-காஷ்மீர் 1 தொகுதி
8. லடாக் 1 தொகுதி

ஆறாம் கட்டமாக 57 தொகுதிகளுக்கு மே 25 ஆம் தேதி வாக்குப்பதிவு:

1. பீகார் 8 தொகுதிகள்
2. ஹரியாணா 10 தொகுதிகள்
3. ஜார்கண்ட் 4 தொகுதிகள்
4. ஒடிசா 6 தொகுதிகள்
5. உத்தரப்பிரதேசம் 14 தொகுதிகள்
6. மேற்கு வங்காளம் 8 தொகுதிகள்
7. டெல்லி 7 தொகுதிகள்

ஏழாம் கட்டமாக 57  ஜூன் 1  ஆம் தேதி 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு:

1. பீகார் 8 தொகுதிகள்
2. ஹிமாச்சல் பிரதேசம் 4 தொகுதிகள்
3. ஜார்கண்ட் 3 தொகுதிகள்
4. ஒடிசா 6 தொகுதிகள்
5. பஞ்சாப் 13 தொகுதிகள்
6. உத்தரப்பிரதேசம் 13 தொகுதிகள்
7. மேற்கு வங்காளம் 9 தொகுதிகள்
8. சண்டிகர் 1 தொகுதி

ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி 1 ஆம் தேதி ஜூன் மாதம் வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்து, ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow