இருக்கு ஆனா இல்லை! திமுக கூட்டணி பேச்சுவார்த்தை: ராமதாசு சொன்ன மழுப்பல் பதில்
அன்புமணி தரப்பு அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் ராமதாசு தரப்பு திமுகவுடன் முறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வரும் தகவல்களுக்கு ராமதாசு மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.
பாமகவில் விரசல் ஏற்பட்டு ராமதாசு, அன்புமணி என இரு அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இருவரும் மாறி மாறி ஆதரவாளர்களை நீக்கியும் வருகின்றனர். அன்புமணியை தலைவர் பதவியில் இருந்த நீக்கியதோடு, தன்னை தலைவராக ராமதாசு நியமித்து கொண்டார்.
ஆனாலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை அன்புமணி கடந்த வாரம் சந்தித்து பேசினார். கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு, தொகுதியும் முடிவானதாக இருவரும் கூட்டாக அறிவித்தனர். இந்த கூட்டணி பேச்சுவார்த்தை சட்டவிரோதம என ராமதாசு குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், ராமதாசு தரப்பு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியிருந்தார். இதுதொடர்பாக ராமதாசிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, உண்மையும் இருக்கும், பொய்யும் இருக்கும் என மழுப்பலாக பதிலளித்தார்.
மூன்று எம்எல்ஏக்கள் நீக்கம்
இதனிடையே அன்புமணி ஆதரவாளர்களான மூன்று எம்.எல்.ஏக்களை பாமகவில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். சிவக்குமார்,சதாசிவம்,வெங்கடேஷ்வரன் ஆகிய மூன்று பேரை பாமகவில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி மூன்று பேர் மீது ராமதாஸ் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
What's Your Reaction?

