கரூர் சம்பவம்: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜர்: விசாரணை தொடங்கியது
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் காலை 11 மணிக்கு நேரில் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கரூர் பிரச்சாரம் தொடர்பாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் இல்லை. எனினும் அவரிடமும் விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்தநிலையில் விசாரணையின் தொடர்ச்சியாக த.வெ.க. தலைவர் விஜயையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது.
இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் காலை 11 மணிக்கு அவர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த சம்மனை ஏற்று சிபிஐ முன் ஆஜர் ஆவதற்காக விஜய் இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். விஜய்யுடன் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார்உட்பட 6 பேர் டில்லி உடன் சென்றனர் . காலை 11.30 மணியளவில் விஜய் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
கடந்த டிசம்பர் மாதம் 3 நாட்கள் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது விஜயிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
டெல்லி விமானநிலையத்தில் இருந்து 20 கி.மீ. விஜய் காரில் பயணம் செய்து சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரது வருகை காரணமாக ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சிபிஐ விசாரணைக்கு ஆஜரான பிறகு, நாளை செவ்வாய்க்கிழமை (ஜன.13) இரவு மீண்டும் தனி விமானத்தில் விஜய் சென்னை திரும்பவுள்ளாா்.
What's Your Reaction?

