சரவெடி அறிவிப்பு...தீபாவளிக்கு லீவு மேல் லீவு கொடுக்கும் அரசு...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 31ம் தேதி வியாழக்கிழமை என்பதால், அதற்கு அடுத்த நாளான நவம்பர் 1ம் தேதியும் (வெள்ளிக்கிழமை) பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் இன்று முதல் மூன்று தினங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இன்று மொத்தம் 4,900 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 700 பேருந்துகளுடன், கூடுதலாக 4,900 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து 2,910 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற முக்கிய பகுதிகளுக்கு 330 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், அரசுப் பேருந்துகளில் பயணிக்க இதுவரை 1.22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் தீபாவளி பண்டிகையை சொந்த ஊர் சென்று கொண்டாடும் மக்களின் வசதிக்காக தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 1ஆம் தேதியை பொது விடுமுறை நாளாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
தொடர்ந்து 4 நாள் விடுமுறை கிடைக்கும் என்பதால் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு தமிழக அரசு அறிவித்தது.
இதனிடையே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இன்றே சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால், நாளைய தினமே சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வரும் பெற்றோர்களின் வசதிக்காக, பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊர் செல்லும் பயணிகள் சிரமமின்றி புறப்பட ஏதுவாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
What's Your Reaction?