தண்ணீரில் கண்டம்.. நிலை தடுமாறி கண்மாய்களில் விழுந்து இருவர்  பலி.. திருவாடானையில் சோகம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்தில் கண்மாய்க்குள் மூழ்கி இருவர் உயிரிழந்தனர்

May 14, 2024 - 14:33
தண்ணீரில் கண்டம்.. நிலை தடுமாறி கண்மாய்களில் விழுந்து இருவர்  பலி.. திருவாடானையில் சோகம்

திருவாடானை அடுத்த ஏழூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(40). நேற்றிரவு கண்மாய்க்கு சென்ற ரமேஷ் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி தவறி கண்மாய்க்குள் விழுந்துள்ளார். இரவு நேரம் என்பதால் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். 

கண்மாய்க்குள் விழுந்து ரமேஷ் பலியானது குறித்து  திருவாடானை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதே போல் திருவாடானை அருகே நெய்வயல் கிராம கண்மாய்க்கு அணிக்கி கிராமத்தை சேர்ந்த அசோக் என்ற இளைஞர் சென்றுள்ளார். மீன்பிடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கண்மாய்க்குள் விழுந்த அசோக் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் நீரில் மிதந்த உடலைகளை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இருவரது இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர். இரு வேறு இடங்களில் நீச்சல் தெரியாமல் மூழ்கி இரண்டு பேர் பலியான சம்பவம் திருவாடாணையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow