தீபாவளி அன்று சம்பவம் செய்த போலீஸ்..விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக இத்தனை வழக்குகள் பதிவா!

சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தகவல்.

Nov 1, 2024 - 09:58
Nov 1, 2024 - 13:51
தீபாவளி அன்று சம்பவம் செய்த போலீஸ்..விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக இத்தனை வழக்குகள் பதிவா!

சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தகவல்.

தமிழ்நாட்டில் சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும்,  தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், புதுமண தம்பதிகள் தங்கள் தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வந்தனர்

தீபாவளியான நேற்று சென்னையில், காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மின்கம்பங்கள், மின்விளக்குகள் மற்றும் வாகனங்களுக்கு அருகே பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும், பட்டாசு வெடிக்கும் போது தண்ணீர் மற்றும் மணல் வாளியை அருகில் வைத்துக் கொள்ளவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தீபாவளியின் காரணமாக நேற்று காலை முதலே சென்னையின் பல்வேறு இடங்களில் புகை மூட்டமாக காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது.

நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் குப்பைகள் சென்னை நகர் முழுவதும் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன. இந்த கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தகவல்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow