நூடுல்ஸ் சாப்பிட்டு உயிரிழந்த  சிறுமி... ஆய்வு முடிவில் திடீர் திருப்பம்..! 

திருச்சி அரியமங்கலத்தில், ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட 15 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் ஆய்வக முடிவு வெளியானது; ஆய்வின் முடிவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Sep 19, 2024 - 18:04
Sep 19, 2024 - 18:10
நூடுல்ஸ் சாப்பிட்டு உயிரிழந்த  சிறுமி... ஆய்வு முடிவில் திடீர் திருப்பம்..! 

திருச்சி அரியமங்கலத்தில் வசித்து வரும் ரயில்வே ஊழியரின் மகளான ஜாக்குலின் (15) பதினோராம் வகுப்பு பயின்று வந்தார். ஜாக்குலின் ஆன்லைனில் அடிக்கடி நூடுல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி,  கடந்த செப்டம்பர் 1-ம் தேதி இரவு நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்டு, குளிர்பானமும் அருந்திவிட்டு  தூங்கியுள்ளார். 

இதையடுத்து மறுதினம் காலை ஜாக்குலின் மரணித்த நிலையில் கிடந்ததாக கூறப்பட்டது. பின்னர், சிறுமி நூடுல்ஸை சாப்பிட்டதால் தான் உயிரிழந்துள்ளார் என பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், அந்த சிறுமியின்  விவகாரத்தில் ஆய்வக முடிவு ஒன்று தற்போது வெளியானகியுள்ளது. சிறுமி சாப்பிட்ட நூடுல்ஸ் கொரியன் நிறுவனத்தைச் சார்ந்தது என்பதால் கொரிய துணை தூதரக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில்  நூடுல்ஸில் எந்தவித நச்சு தன்மையும் இல்லை என்ற முடிவு வெளியாகி உள்ளது. இதன்மூலம் சிறுமி உட்கொண்ட நூடுல்ஸில்  எந்தவித பாதிப்பும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

சிறுமி நூடுல்ஸ் சாப்பிட்டுதான் உயிரிழந்தார் என கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் இந்த ஆய்வு முடிவு திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.

அதோடு, சிறுமிக்கு ஏற்கனவே உடல் நல பாதிப்புகள் இருந்ததன் காரணமாக வேறு ஏதும் காரணத்தினால் சிறுமி உயிரிழந்தாரா என்பது  தடயவியல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow