மதுக்கடையால் அல்லல்படும் மக்கள்.. வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்.. தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவிப்பு!

தட்டி கேட்டாலோ, கண்டித்தாலோ குறிவைத்து தொல்லை தருவதாக குற்றச்சாட்டு

Apr 10, 2024 - 18:42
மதுக்கடையால் அல்லல்படும் மக்கள்.. வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்.. தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவிப்பு!

ஈரோட்டில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டியுள்ள பொதுமக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவாதாக தெரிவித்துள்ளனர்.

ஈரோடு சூரம்பட்டியை அடுத்துள்ள திரு.வி.க. வீதியை சேர்ந்த பொதுமக்கள், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, அப்பகுதியில் அறிவிப்பு பலகை வைத்துள்ளதோடு, வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றியுள்ளனர்.

இதுகுறித்து செய்திகாளர்களிடம் தெரிவித்த அப்பகுதியினர், திரு.வி.க. வீதியில்  செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும்,குறிப்பாக இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் குடியிருப்பு வீடுகளுக்கு முன்பு அமர்ந்து மது அருந்துவதால் பல பிரச்னைகளை சந்தித்து வருவதாகவும் குற்றம்சாட்டினர். 

இதனை தட்டி கேட்டாலோ, கண்டித்தாலோ குறிவைத்து தொல்லை தருவதாக குற்றம்சாட்டிய அப்பகுதி பெண்கள், குடித்துவிட்டு பாட்டில்களை வீட்டு வாசல்களிலும், வண்டிகளிலும் போட்டுவிட்டு செல்வதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow