ரீல்ஸ் பார்த்தபடி ட்ரைவிங்... அசால்ட்டாக டியூட்டி பார்த்த ஓட்டுநர்... ரியல் ஆக்ஷனில் இறங்கிய அரசு

ரீல்ஸ் பார்த்துக்கொண்டே அரசு பேருந்தை ஓட்டிய பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

Oct 11, 2024 - 12:19
Oct 11, 2024 - 13:37
ரீல்ஸ் பார்த்தபடி ட்ரைவிங்... அசால்ட்டாக டியூட்டி பார்த்த ஓட்டுநர்... ரியல் ஆக்ஷனில் இறங்கிய அரசு

ரீல்ஸ் பார்த்துக்கொண்டே அரசு பேருந்தை ஓட்டிய பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்பட தொடர் விடுமுறை தினத்தை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. போதுமான ஓட்டுநர்கள் இல்லாத நிலையில் தற்காலிக ஓட்டுநர்களைப் பயன்படுத்தி இந்த பேருந்துகள் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இப்படி கூடுதலாக விடப்பட்ட அரசு விரைவுப் பேருந்து ஒன்று திருப்பதியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை மாதவரத்தை நோக்கி வந்துள்ளது. பேருந்தில் அதிக அளவில் பயணிகள் நெருக்கி அடித்தபடி வந்துள்ளனர்.

அப்பொழுது பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுநர் ரீல்ஸ் பார்த்தபடி பேருந்தை இயக்கியுள்ளார். இதனை பார்த்த பெண் பயணி ஒருவர் கோபமடைந்துள்ளார். இதனை அவர் உடனடியாக வீடியோ பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து பேருந்தில் பயணித்த அப்பெண் பயணி பேருந்து ஓட்டுநர் ரீல்ஸ் பார்த்தபடி பேருந்து  இயக்குவதை வீடியோ எடுத்து அதனை நடத்துனதிடம் காண்பித்துள்ளார் 

மேலும் ஓட்டுநர் சுமார் 2 கிலோ மீட்டர் வரை சாலையை கவனிக்காமல் போனை பார்த்தபடி பேருந்தை இயக்கி வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 பெண் பயணியின் புகாரை கேட்ட நடத்துனர், பேருந்து ஓட்டுநர் புதியதாக பணியில் சேர்ந்திருப்பதாகவும் தான் அருகில் அமர்ந்து பார்த்துக்கொள்வதாகவும் கூறி சமாதானப்படுத்தியுள்ளார். அந்த பெண் பயணி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், பிரச்சனை பூதாகரமாக வெடிக்க திருப்பதியிலிருந்து அரசுப் பேருந்தை ரீல்ஸ் பார்த்தவாறே ஓட்டுநர் ஓட்டி வந்த  ஓட்டுநரை பணி நீக்கம் செய்து அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow