தேர்தல் பறக்கும்படைக்கே விபூதி அடித்த அதிமுகவினர்..! என்னா ஒரு டெக்னிக்கு..!

சிவகங்கை அருகே தேர்தல் பறக்கும் படை கண்ணீல் மண்ணை தூவிவிட்டு, வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுத்ததுள்ளனர்.

Mar 30, 2024 - 09:43
தேர்தல் பறக்கும்படைக்கே விபூதி அடித்த அதிமுகவினர்..! என்னா ஒரு டெக்னிக்கு..!

சிவகங்கை அருகே தேர்தல் பறக்கும் படை கண்ணீல் மண்ணை தூவி விட்டு, வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுத்ததுள்ளனர்.

2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீயாய் வேலை செய்கின்றன. நிமிடத்துக்கு நிமிடம் புதுப்புது சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சேவியர் தாஸ். கொட்டக்குடி பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்றுள்ளார். அப்போது வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்க அப்பகுதி அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து வேட்பாளர் மக்களிடம் கைகூப்பி வாக்கு கேட்டுவிட்டு வாகனத்தில் அங்கிருந்து சென்றுள்ளார். வேட்பாளரின் வாகனத்தை தேர்தல் பறக்கும்படை வாகனமும் பின்தொடர்ந்து செல்ல, முன்னதாக அதிமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தலா 50 ரூபாய் வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படைக்கே அதிமுகவினர் விபூதி அடித்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow