ஹாலிவுட் படத்தின் காப்பியா விடாமுயற்சி..? விஜய் ரூட்டில் அஜித்... குழப்பத்தில் ரசிகர்கள்!
அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஒன்லைன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. விடாமுயற்சி செகண்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து, இந்தப் படம் ஹாலிவுட் மூவியின் காப்பியா எனவும் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி படத்தில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இந்தப் படம் தொடங்கியதில் இருந்தே ரசிகர்கள் அப்டேட் கேட்டு கேட்டு நொந்துவிட்டனர். ஒருகட்டத்தில் இந்தப் படம் ரிலீஸாகாது என ரசிகர்களே முடிவு செய்துவிட்டனர். அதன்பின்னர் தான் விடாமுயற்சியில் இருந்து மேக்கிங் வீடியோ, அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் என வரிசையாக வந்துகொண்டே இருக்கின்றன. நேற்று இரவு வெளியான அஜித்தின் செகண்ட் லுக் போஸ்டர் தொடர்ந்து டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
விடாமுயற்சி திருவினையாக்கும் என்ற கேப்ஷனுடன் உருவாகியுள்ள இந்த போஸ்டர்களின் ஒன்றில், அஜித் கையில் துப்பாக்கியுடன் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார். இன்னொரு போஸ்டர் அஜித் கார் ட்ரைவ் செய்வதை போல் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர்களும் இதற்கு முன்பு வெளியான மேக்கிங் வீடியோக்களும் விடாமுயற்சி தரமான ஆக்ஷன் ஜானர் மூவி தான் என்பதை கன்ஃபார்ம் செய்துள்ளது. ஆனால் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது மட்டும் இதுவரை தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் தான் விடாமுயற்சி செகண்ட் லுக் போஸ்டரை வைத்து, இது ஹாலிவுட் படத்தின் தழுவலாக இருக்குமோ என ஒரு டாக் சென்று கொண்டிருக்கிறது. அதாவது 1997ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான திரைப்படம் பிரேக்டவுன். கர்ட் ரஸ்ஸல், ஜே.டி. வால்ஷ், கேத்லீன் குயின்லன் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படத்தை ஜொனாதன் மோஸ்டோவ் இயக்கியிருந்தார். இப்படத்தின் கதை படி, பாலைவனத்தில் ஹீரோவும் அவரது மனைவியும் பாலைவனத்தில் காரில் ட்ரைவ் செல்கின்றனர். அப்போது கார் பிரேக்டவுன் ஆகிவிட ஹீரோவின் மனைவியும் காணாமல் போய்விடுகிறார். அவரை ஹீரோ எப்படி கண்டுபிடித்தார் என்பதே பிரேக்டவுன் படத்தின் கதை. பிரேக்டவுன் படம் முழுக்க பாலைவனத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.
விடாமுயற்சி படத்தின் மொத்த படப்பிடிப்பும் பாலைவனம் அதிகமுள்ள அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. அதேபோல், அஜித்தும் த்ரிஷாவும் இப்படத்தில் கணவன், மனைவியாக நடிக்கின்றனர். விடாமுயற்சி படத்தின் கதைபடி பாலைவன நிலப்பரப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து அப்டேட் வெளியாகிறது. இந்த கணக்கையெல்லாம் கூட்டி கழித்துப் பார்த்தால் ஹாலிவுட் மூவியான பிரேக் டவுனின் ரீமேக் வெர்ஷனாகவோ அல்லது அதனை தழுவி எடுப்பட்ட படமாகவோ விடாமுயற்சி இருக்கும் சொல்லப்படுகிறது. ஆனாலும் இதுபற்றி படக்குழு தரப்பில் இருந்து எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.
விஜய்யின் லியோ, ஹாலிவுட் மூவியான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. லியோ படப்பிடிப்பு தொடங்கியது முதலே இது ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் ரீமேக் தான் என ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால், லோகேஷ் கனகராஜ் அதுபற்றி வாயே திறக்காமல் இருந்துவிட்டு, படம் ரிலீஸாகும் போது டைட்டில் கார்டில் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் தழுவல் தான் என நன்றி தெரிவித்திருந்தார். அஜித்தும் அதே ரூட்டில் இறங்கிவிட்டாரா என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?