வான் சாகச நிகழ்ச்சி - முதியவர் உயிரிழப்பு

சென்னையில் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த முதியவர் ஒருவர் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழப்பு

Oct 6, 2024 - 17:46
வான் சாகச நிகழ்ச்சி - முதியவர் உயிரிழப்பு

சென்னையில் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த முதியவர் ஒருவர் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழப்பு

இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று மிகப் பிரமாண்ட விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கியது.

இந்நிகழ்ச்சியை காண  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் லட்சக் கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்தனர். 

நிகழ்ச்சியின் துவக்கமாக பாராசூட்டில் இருந்து குதித்து ஆகாய கங்கை குழு சாகசம் செய்தது. இதையடுத்து ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கமாண்டோக்கள் இறங்கி பணையை கைதிகளை மீட்பது குறித்து தத்ரூவமாக நடித்துக்காட்டினர்.அதன்பின் விமானத்தில் இருந்து தேசிய கொடி மற்றும் ஆகாய கங்கை குழு கொடி வண்ணத்திலான பாராசூட் வீரர்கள் வானில் இருந்து தரையிறங்கினர்.

இநிலையில், வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் வெயிலின் தாக்கம் காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டு ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

4 பேர் உள் நோயாளியாகவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 9 பேர் நீர் சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow