வான் சாகத்தை காண மெரினாவில் குவிந்த மக்கள்... கடல் அலையை மிஞ்சிய மக்கள் அலை
சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையின் வான் சாகத்தை காண லட்சக் கணக்கான மக்கள் குவிந்ததால் கமராஜர் சாலை, அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையின் வான் சாகத்தை காண லட்சக் கணக்கான மக்கள் குவிந்ததால் கமராஜர் சாலை, அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று மிகப் பிரமாண்ட விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கியது.
இந்நிகழ்ச்சியை காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் லட்சக் கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்தனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக பாராசூட்டில் இருந்து குதித்து ஆகாய கங்கை குழு சாகசம் செய்தது. இதையடுத்து ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கமாண்டோக்கள் இறங்கி பணையை கைதிகளை மீட்பது குறித்து தத்ரூவமாக நடித்துக்காட்டினர்.அதன்பின் விமானத்தில் இருந்து தேசிய கொடி மற்றும் ஆகாய கங்கை குழு கொடி வண்ணத்திலான பாராசூட் வீரர்கள் வானில் இருந்து தரையிறங்கினர்.
மெரினா கடற்கரையில் வான் சாகத்தை காண சுமார் 4 லட்சம் பேர் கூடியதாக கூறப்படுகிறது. தற்போது வான்சாகச நிகழ்ச்சி நிறைவடைந்து மக்கள் வீடு திரும்புகின்றனர். இதனால் நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?