Weekend பிளான் இருக்கா.. இயல்பவிட இன்னைக்கு 5 டிகிரி வெயில் அதிகமா இருக்குமாம்... உஷ்ஷ்ஷ்ஷார்!

தமிழ்நாட்டில் கோடைக்காலம் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது. இளவேனில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை, வைகாசி மாதங்களே இன்னும் வந்தபாடில்லை அதற்குள் பல நகரங்களில் வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று (ஏப்ரல் 7) இயல்பை விட 3 முதல் 5 டிகிரி வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Apr 7, 2024 - 08:56
Weekend பிளான் இருக்கா.. இயல்பவிட இன்னைக்கு 5 டிகிரி வெயில் அதிகமா இருக்குமாம்... உஷ்ஷ்ஷ்ஷார்!

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 7) வறண்ட வானிலை நிலவும். 

வடதமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும். இதர தமிழகத்தின் சில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் 

மேலும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக இருப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 6) 15 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்த படியாக திருப்பத்தூா் - 106.52, பரமத்தி வேலூா் - 105.8, வேலூா் - 105.44, தருமபுரி, ஈரோடு தலா - 105.26, திருச்சி - 104.9, திருத்தணி - 104.18, நாமக்கல் - 104, மதுரை விமான நிலையம் - 103.64, சென்னை மீனம்பாக்கம், மதுரை நகரம் தலா - 103.28, கோவை - 102.2, தஞ்சாவூா் - 102.2, பாளையங்கோட்டை - 101.48 என வெப்ப நிலை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow