கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாம்: சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு முடித்து வைப்பு
அறிக்கையை ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர் ஏ.பி. சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ராவீந்திரன் ஆஜராகி, கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழுவின் அறிக்கையை தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் பணியாற்றும் பிற மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்தார். இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லாததால் அது போன்ற ஒரு குழுவை அமைக்க தேவையில்லை என தெரிவித்தனர்.இதனையடுத்து, மீதமுள்ள இரண்டு பள்ளிகளையும் நிர்வகிக்க ஒரு வாரத்தில் அதிகாரியை நியமிக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை நிலை தொடர்பான அறிக்கையை ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
What's Your Reaction?