”ஒரே நாடு ஒரே தேர்தல் நல்லது தான்..” - தடாலடியாக பேசிய பிரேமலதா

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி. ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தலில் பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. ஓட்டுக்கு காசு கொடுக்கும் கலாச்சாரம், கள்ள ஓட்டு போடுவது,  மக்களின் வரிப்பணம் வீணாகாமல் தடுப்பது போன்ற பல நல்ல விஷயங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார் பிராமலதா விஜயகாந்த்.

Sep 20, 2024 - 06:45
Sep 20, 2024 - 06:55
”ஒரே நாடு ஒரே தேர்தல் நல்லது தான்..” - தடாலடியாக பேசிய பிரேமலதா

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி. ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தலில் பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. ஓட்டுக்கு காசு கொடுக்கும் கலாச்சாரம், கள்ள ஓட்டு போடுவது,  மக்களின் வரிப்பணம் வீணாகாமல் தடுப்பது போன்ற பல நல்ல விஷயங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார் பிராமலதா விஜயகாந்த்.

தேமுதிகவின் 20 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச்செயலாளர்கள் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். தொடர்ந்து தையல் இயந்திரம், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.

தொடர்ந்து மேடையில் பேசிய தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதிஸ், ”ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி வெற்றி பெறும்.பிரேமலதா விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக அமர்வார்.இந்தியாவில் குட்காவுக்கும், கள்ளசாரயத்திற்கும், குவாட்டருக்கும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு” என கடுமையாக சாடினார்.

பின் மேடையில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தலைவர் இல்லாதது நமக்கு மிகப்பெரிய ஒரு வலியை கொடுத்திருக்கிறது. நம் தலைவர் மனிதராகப் பிரிந்து புனிதராக மாறி தற்போது தெய்வமாக இருக்கிறார். அந்த ஒரு நம்பிக்கையில் தான் லட்சக்கணக்கான தொண்டர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். செப்டம்பர் 14 அன்று மாபெரும் பொதுக்கூட்டத்தை மதுரையில் நடத்தினார்.” 

”நாம் ஒன்றும் ஆண்ட கட்சியோ, ஆளுகின்ற கட்சியோ, லஞ்ச ஊழல் வாகன கட்சியோ, மக்களை ஏமாற்றி பிழைத்த கட்சியோ, கட்டப்பஞ்சாயத்து செய்யாமல், வசூல் செய்யாமல் மக்களுக்காக நேர்மையாக வியர்வை சிந்தி உருவான கட்சி நமது கட்சி. இந்தக் கட்சிக்காக தொண்டர்கள் நீங்கள் உழைத்ததற்கு உங்களை ஒரு நல்ல இடத்திற்கு கொண்டு செல்வேன்,” என தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசிய அவர், ”ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமா என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி. ஒரே நாடு ஒரே தேர்தலில் பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. ஓட்டுக்கு காசு கொடுக்கும் கலாச்சாரம் ஒழியும், கள்ள ஓட்டு போடுவதும் தடுக்கப்படும், மக்களின் வரிப்பணம் வீணாகாமல் தடுக்கப்படும், ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே செய்ய முடியுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.”  

”திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு அறிவிக்கிறார். திமுக ஆண்டுக்கு 500 மது கடைகளை மூடுவோம் என்று ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் ஒரு கடையும்  மூடவில்லை. தனியாருக்கு பார்களை அனுமதி செய்து 800 மது கடைகளை திறந்து லட்சக்கணக்கான திமுகவினர் சம்பாதித்து வருகின்றனர்.  டாஸ்மாக், கஞ்சா என இந்த நாட்டை போதை நாடாக மாற்றிய ஒரே பெருமைதான் திமுகவின் அரசுக்கு இருக்கிறது. வேற எந்த பெருமையும் இல்லை,” என கடுமையாக விமர்சித்தார். 

மேலும், “திமுக கூட்டணியில் ஏகப்பட்ட குழப்பங்கள் நடைபெற்று வருகிறது. திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு என்று கூறுகிறார், ஆட்சியிலே பங்கு வேண்டும் என்றும் கூறுகிறார், அதேபோன்று செல்வப் பெருந்தகை மீண்டும் காமராஜர் ஆட்சி அமைப்பதுதான் காங்கிரசின் கொள்கை என்று கூறுகிறார், அப்போ திமுக ஆட்சி சரியில்லை என்பதை சகோதரர் திருமாவளவனவனும், செல்வப் பெருந்தகையும் ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆட்சி மோசமான ஆட்சி நடைபெறுகிறது என்று கூட்டணி கட்சிகள் தெரிவிக்கிறது.”

”உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவது குறித்து அவர்கள் கட்சி ஏற்றுக் கொண்டால் ஏற்று கொள்ளட்டும். ஆனால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்று உறுதியாக சொல்கிறேன். அதிமுக, தேமுதிக கூட்டணிதான் வெற்றி பெறும்” 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow