தமிழக அரசின் கஜானா காலி...காரணம் இவங்கதான்...விளக்கம் கொடுத்த ஆ.ராசா
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தொழில் முதலீடுகளை கொண்டு வந்து நிதி பிரச்னையை சரி செய்தார்"
முன்னதாக தமிழகத்தில் ஆட்சி செய்த அ.தி.மு. க.வினர் தமிழக அரசின் கஜானாவை காலி செய்து விட்டுதான் சென்றனர், அதனை சரிசெய்தது முதலமைச்சர் முக.ஸ்டாலின் தான் என திமுக எம்.பி. ஆ.ராசா பேசியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க. பாக முகவர்கள், செயல்வீரர்கள் கூட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் திருமன மண்டபத்தில் நடந்தது. இதில் எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது, நீலகிரி தொகுதியில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெற ஒன்றுபட்டு தேர்தலில் பணியாற்ற வேண்டும் என்றும், நமது வெற்றியை முதலமைச்சருக்கு காணிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், தமிழகத்தில் இதற்கு முன் ஆட்சி செய்த அ.தி.மு.க.வினர் தமிழக அரசின் கஜானாவை காலி செய்து விட்டு சென்றதாக குற்றம்சாட்டிய ஆ.ராசா, அதன் பிறகு ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 மாதத்தில் பல்வேறு தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்து நிதி பிரச்னையை சரி செய்ததாக தெரிவித்தார். இதன்மூலமே ரூ. 8 லட்சம் கோடி முதலீடு தொழில் துறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
What's Your Reaction?