திருப்பதி லட்டு குறித்து விமர்சிப்பவர்களை கைது செய்க- எச்.ராஜா ஆவேசம்

விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணிக்கு கிடைத்த ஓட்டு 6% தான். அப்படி இருக்கையில்,  தவிர்க்க முடியாத சக்தி விடுதலை சிறுத்தைகள் என்று பேசுகிறார்கள்.

Sep 25, 2024 - 13:30
திருப்பதி லட்டு குறித்து விமர்சிப்பவர்களை கைது செய்க- எச்.ராஜா ஆவேசம்

திருப்பதி லட்டு குறித்து விமர்சிக்கும் நபர்கள் கைது செய்யப்பட வேண்டும் என  எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, கர்நாடகாவில் சித்தராமையா மற்றும் அவரின் மனைவிக்கு எதிராக உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. இதனால் சித்தராமையாவை ராஜினமா செய்ய வேண்டும். காங்கிரஸ் ஊழல் குடும்பம் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான். 10 ஆண்டுகள் 12 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளார்கள். இன்று நேர்மைக்கு கிடைத்திருக்கும் பரிசாக தீர்ப்பு வந்துள்ளது. சித்தராமையா ராஜினாமா செய்தால்தான் விசாரணை நேர்மையாக இருக்க முடியும்.

அதேபோல் திரெளபதி திரைப்பட இயக்குநர் மோகன ஜி கைது முறையற்றது. இதை உணர்த்துவதைப்போல நீதிமன்றம் காவல்துறையின் கன்னத்தில்  அடி கொடுத்திருக்கிறது.ஆனால் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசனை இதுவரை நீக்காமல் உள்ளனர்.

விசிக கட்சிக்குள் கருத்து வேறுபாடு உள்ளது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை சேர்ந்து விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணிக்கு கிடைத்த ஓட்டு 6% தான். அப்படி இருக்கையில்,  தவிர்க்க முடியாத சக்தி விடுதலை சிறுத்தைகள் என்று பேசுகிறார்கள்.மேலும் திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சி என்பதே ஏமாற்றம்தான். பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் ஆயுதங்களுடன் செல்கிறார்கள்.தொடர்ந்து படுகொலைகள் நடந்த வண்ணம் இருக்கிறது. ஒரே நாளில் ஆறு கொலைகள் நடந்துள்ளது.  மகாவிஷ்ணு பிரச்சனை நடந்தது சைதாப்பேட்டை பள்ளியில், ஆனால் அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியை மாற்றப்பட்டதற்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொல்கிறார் தன்னுடைய ஏரியாவுக்கு வந்து மகாவிஷ்ணு பேசியதாக அவர் ஏரியா என்பது திருச்சிதான். 

திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியர் சகாய மேரி  அவரின் மகன் மருத்துவர் செபாஸ்டின் டேனியல் கைது செய்யப்பட்டுள்ளார், அதைபற்றி அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியுள்ளாரா? 40 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.  அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியையின் மகன் திருச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஏன் பேசவில்லை. எல்லா மதத்தையும் சமமாக பாவிக்க வேண்டும்.  பஞ்சாமிர்தம் பற்றி பேசியவர்கள் மீது வழக்கு போடுகிறார்கள் கைது செய்யப்படுகிறார்கள் ? திருப்பதி லட்டு விஷயத்தை விமர்சித்த நடிகர்கள் கார்த்தி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் மன்னிப்பு கேட்டுள்ளனர். திருப்பதி லட்டு குறித்து விமர்சனம் செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow