ரயிலில் சரக்கு அடிப்பது, சிகரெட் பிடித்தால் 6 மாதம் ஜெயில்: ரயில்வே பாதுகாப்பு படை வார்னிங்

ரயில்களில் சரக்கு அடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபவர்களுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என ரயில் பாதுகாப்புப் படை வார்னிங் கொடுத்துள்ளது. 

Feb 24, 2026 - 08:41
ரயிலில் சரக்கு அடிப்பது, சிகரெட் பிடித்தால் 6 மாதம் ஜெயில்: ரயில்வே பாதுகாப்பு படை வார்னிங்
ரயிலில் சரக்கு அடிப்பது, சிகரெட் பிடித்தால் 6 மாதம் ஜெயில்

நீண்ட தூர ரயில் பயணிகளில் சில பயணிகள் மது அருந்துவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். இப்படி ரயில்களில் மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர். சிலர் புகை பிடித்து, சக பயணியருக்கு தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றனர். இது மற்ற பயணிகளுக்கு உடல் ஆரோக்கியம் மட்டுமில்லாது மனதளவிலும் கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. 

இது போன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் ரயில்வே துறைக்கு வந்த வண்ணம் உள்ளன. ரயில்வே சட்டம் 1989 பிரிவு 145ன்படி, ரயில்களில் மது குடிப்பது, புகை பிடிப்பது குற்றம். இது குறித்து, '139' என்ற உதவி எண்ணில் பயணியர் புகார் அளிக்கலாம். ரயில்களில் மது குடிப்பது, புகை பிடிப்பது உறுதி செய்யப்பட்டால், 500 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். 

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் இந்த சட்டத்தை தீவிரப்படுத்த ரயில்வே பாதுகாப்புப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரயில்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுகிறதா என தீவிரமாக ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிக்க தொடங்கி உள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow