உருவானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி - தமிழகத்திற்கு பாதிப்பா?- வானிலை மையம் சொன்ன அதிர்ச்சி ரிப்போர்ட்
அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளது
மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புயல் சின்னங்களால் கனமழை பெய்தது. இதன் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் வரலாறு காணாத வகையில் வெள்ள நீர் சூழ்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் டிச.16, 17 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்ததாக வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இருப்பினும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்தமான் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?