பாலா எனக்கு ஹீரோ தான் - இயக்குனர் மணிரத்னம்
எல்லோருக்கும் இயக்குனர் பாலா மிகச் சிறந்த இயக்குனர் ஆனால் எனக்கு அவர் ஹீரோ என்று இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பாலாவின் 25 ஆண்டு கால சினிமா பயணத்தை சிறப்பிக்கும் விதமாகவும், வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில், இயக்குநர் மணிரத்னமும் கலந்து கொண்டார். அப்போது பாலைவை வாழ்த்தினார். எல்லோருக்கும் இயக்குனர் பாலா மிகச் சிறந்த இயக்குனர் ஆனால் எனக்கு அவர் ஹீரோ என்று கூறினார்.
வணங்கான் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மணிரத்னம் பேசுகையில்,
எல்லோருக்கும் பாலா மிகசிறந்த இயக்குனர் ஆனால் எனக்கு அவர் ஹீரோ. அவருடைய சேது படத்தை நான் மிஸ் பண்ணிட்டேன். நந்தா திரைப்படத்தைதான் தியேட்டர்ல பார்த்தேன்.
எல்லா கலையிலையும் நேர்த்தி இருந்தது. அவர் அன்னக்கு எப்படி இருந்தாரோ, அதே மாதிரிதான் ஹீரோ தான் இப்போதும். பாலா கிட்ட 'ரொம்ப மெதுவாக படம் பண்றீங்க'ன்னுதான் சொல்வேன். நிறைய படங்கள் தமிழ் சினிமாவை கீழ கொண்டு போகுது. நீங்க வந்து படம் பண்ணனும் என்று கூறினார்.
What's Your Reaction?