சித்த மருத்துவத்தில் மோரின் மகத்துவம்
கோடை வந்தாலே முன்னோர்கள் தினமும் மோர் குடிப் பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தனர். இன்றும் பல வீடுகளில் பெரியவர்கள் இந்த நல்ல பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவும் பானங்களில் நீர் மோருக்குத் தனி இடம் உண்டு.
குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தொடங்கி மே, ஜூன் மாதங்கள் வரை நீடிக்கும் கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க நீர்மோர், உங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம். அப்படி என்ன சிறப்பு இருக்கிறது நீர்மோரில்? சித்தமருத்துவம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம். வீட்டில் 'நீரைச் சுருக்கி, மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி' என்பது தேரையர் சித்தர் அருளிய நோய் அணுகா நெறியாகும். அதாவது:
சித்த மருத்துவத்தில் மோரின் மகத்துவம்நீரைச் சுருக்கி -நீரை நன்றாகக் கொதிக்க வைத்து, சுண்டக் காய்ச்சி அருந்த வேண்டும். இதனால் உடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும்.
மோரைப் பெருக்கி - தயிரில் அதிக நீர் சேர்த்து நன்றாகக் கடைந்து மோராக்கி, அதிகமாக அருந்த வேண்டும். இது உடலைக் குளிர்ச்சியாக்கி, செரிமானத்தை சீராக்கும்.நெய்யை உருக்கி - நெய்யை சூடுபடுத்தி உருகிய நிலையிலேயே உணவில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இது உடலுக்குத் தேவை யான நல்ல கொழுப்பை அளித்து, பசியைத் தூண்டும்.
இந்த மூன்று பழக்கங்களும் உடலில் நோய் அணுகாமல் காக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன என்று சித்த மருத்துவம் கூறுகிறது.
பட்டர் மில்க் எனப்படும் மோர் என்பது, தயிரில் இருந்து வெண்ணெயை பிரித்தெடுத்த பிறகு கிடைக்கும் சத்தான திரவம். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் பான மாகக் கருதப்படும் மோரில் புரோபயாடிக்குகள், கால்சி யம், பொட்டாசியம், வைட்ட மின் பி12 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பாஸ் பரஸ், ரிபோஃப்ளேவின் போன்ற அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்களும் இதில் உள்ளன.பல்வேறு சத்துகள் நிறைந்த மோர் செரிமானத்தை மேம்படுத்தி, உடல் வெப்பத்தைத் தணித்து, நெஞ்செரிச்சலைக் குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.
நீர்ச்சத்து குறைபாடு தவிர்க்கும்
கோடைகாலத்தில் மோருடன் சிறிது உப்பு கலந்து (ஒரு டம்ளர் மோருக்கு 2 டம்ளர் தண்ணீர்) நீர்க்க கரைத்து குடித்தால் உடல் வெப்பம் சட்டென்று தணியும்.
மோரில் எலக்ட்ரோலைட்கள் மற்றும்நீர்ச்சத்து அதிக மாக இருப்பதால் கோடைக் காலங்களில் உடலை வறட்சி நிலையிலிருந்து காக்கிறது. அதிக வெப்பநிலையிலும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
மதிய உணவின்போது இறுதியில் மோர் மற்றும் தயிரைச் சாப்பிடுவது நம் பாரம்பரிய வழக்கம். மோரிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
லாக்டோ புளித்த மோரில் காக்கஸ் லாக்டிஸ் (Lactococcus lactis) போன்ற குடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் உள்ளன. இவை உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் சிறப்பாக உறிஞ்ச உதவுகிறது. மேலும் ஜீரணக்கோளாறுகளைத் தடுக்கிறது. மேலும் வயிறு உப்புசம் மற்றும் அசிடிட்டி பிரச்னைகளின் அபாயங் களையும் தடுக்கிறது.
குடல் தொற்றுகள் தடுக்கும்மோரில் உள்ள புரதங்கள் (லாக்டாதெரின், பியூடிரோபிலின்) மற்றும் பெப்டைடு, ஹைட்ரோலிசேட்ஸ் போன்றவை சால்மொனெல்லா, ஈ.கோலை (peptide hydrolysates, Salmonella, E. coli, Listeria) ए ए கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டவை.
சித்த மருத்துவத்தில் குடல் தொற்றுகளால் ஏற்படும் IBS, மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்னைகளுக்கு மோர் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் மூலநோய் அறிகுறிகளை தணிப்பதில் மோர் உதவுகிறது. எவ்வித மசாலாக்களும் சேர்க்கப்படாமல் சிறிது உப்பு கலந்து மோர் அருந்தி வந்தால் மூலநோய் அறிகுறிகள் கட்டுப்படும்.
இதர மருத்துவக் குணங்கள்
மோர் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது ஆஞ்சியோ டென்சின்-மாற்று என்சைமின் செயல்பாட்டைத் தடுக்க உதவும். இத னால் ரத்த நாளங்கள் தளர்வடைந்து ரத்த அழுத்தம் குறைய உதவு கிறது.
மோரில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் வலிமையைப் பாதுகாத்து, ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும் சமீபத்திய ஆய்வுகள் மோரில் உள்ள கூறுகள் குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கக் கூடும் என தெரிவிக்கின்றன.
மோர் தயாரிக்கும் முறை
தயிர் பாக்கெட்டுகளில் நீர் சேர்த்து சாதாரணமாக கலக்கி குடிப்பது சரியான முறை அல்ல, அதனால் கிடைக்கும் சத்தும் முழுமையாக இருக்காது.
தயிருடன் போதுமான அளவு நீர் சேர்த்து, நன்கு கடைந்து வெண்ணெயை நீக்கிய பிறகு கிடைப்பதே உண்மையான மோர் ஆகும்.
இதன் சுவையையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, மல்லித்தழை, பெருங்காயம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து பருகலாம். கொத்தமல்லித் தழையை மோருடன் அடித்து சீரகப்பொடி, பெருங்காயம் சேர்த்து குடிக்கலாம். மல்லியின் வாசத்துடன் மோர் நன்றாக இருக்கும்.
மோரை எதனுடன் சேர்த்து சாப்பிடலாம்?
சித்த மருத்துவத்தில் மோர் அனுபானமாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள்காமாலைக்கு மருந்தாகப்பயன்படும் கீழாநெல்லிச்சாற்றினை வெறுமனே அருந்துவதைவிட, மோருடன் அனுபானமாக சேர்த்துக் குடிப்பதே நல்லது. கற்றாழை ஜெல்லுடன் மோர் சேர்த்து பிளெண்டரில் அரைத்து, சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து குடித்தால் உடனடியாக உடல் குளிர்ச்சி அடையும். கோவைக்காயை சி று துண்டுகளாக நறுக்கி மோர், மிளகுத்தூள், சீரகத்தூள், இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துச் சாப்பிடலாம்.அதே போல் வெள்ளரிக்காய், கேரட் போன்ற காய்கறிகளைத் துருவி மோரில் சேர்த்து, சிறிது மிளகாய், உப்பு சுவையாகவும் கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமாகவும் இருக்கும்.
பால் உணவுகளில் எளிதில் செரிமானமாகும் சிறந்த உணவாக மோர் கருதப்படுகிறது. இது செரிமானத்தில் எந்தவித சிக்கலையும் ஏற்படுத்தாது என்பதால் எல்லோரும் அருந்தலாம். இன்னும் சொல்லப்போனால் சர்க்கரை நோயாளிகள் அருந்துவதற்கும் ஏற்றது மோர்.
மோரைப் பெருக்கி வெயில் நோயை விலக்குவோம். நீர்ச்சத்து குறைபாடில்லாமல் கோடையை கடப்போம்.
What's Your Reaction?













