அமைச்சரவை மாற்றம்: முதல் இடத்தில்  முக்கிய பெண் அமைச்சர்..?

தவெக அரசில் அமைச்சரவை மாற்றம் செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்ச்சைகளில் சிக்கிய நான்கு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்றும், சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Aug 8, 2026 - 14:39
அமைச்சரவை மாற்றம்: முதல் இடத்தில்  முக்கிய பெண் அமைச்சர்..?

முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினைப் போலவே தன் அமைச்சரவை சகாக்கள் சிலரால் தூக்கம் கெட்டு தவிக்கிறார் முதலமைச்சர் விஜய். ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளால் செய்திகளில் அடிபட வேண்டிய இத்தகைய அமைச்சர்கள், பரபர பஞ்சாயத்துகளால், முதல்வருக்கு தலைவலியை தந்து வருகின்றனர். இதையடுத்து, தனது அமைச்சரவையைக் கலைத்துப்போட்டு நான்கு அமைச்சர்களுக்கு மெர்சல் ட்ரீட்மென்ட் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார் முதலமைச்சர் விஜய். 

இவர்களில் தவெக அரசின் உள்விவகாரம் அறிந்த ஒருவரிடம் பேசினோம். அரசின் நாற்காலியை வலுப்படுத்திவிட்டு, நிர்வாகத்தின்மீது கவனம் செலுத்தத் தொடங்கிய முதலமைச்சர் விஜய்க்கு, அமைச்சர்கள் சிலரது செயல்பாடுகள் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறார். அவர்கள் குறித்து உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டும் முதல்வரை அப்செட் ஆக்கியிருக்கிறதாம். எனவே, தான் நினைக்கும் தூய ஆட்சியின் தனித்துவத்தைக் காக்கவும், மக்களிடம் த.வெ.க. மீது இருக்கும் மதிப்பை தக்கவைத்துக்கொள்ளவும் அதிரடி முடிவுக்கு தயாராகிவிட்டாராம் முதலமைச்சர் விஜய்.

அதாவது, ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே கட்டிங், அடாவடி உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கிய அமைச்சர்கள் நான்கு பேரை பதவியிலிருந்து நீக்கி, அமைச்சரவையில் மாற்றங்களை கொண்டுவர விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  தவிர, சில அமைச்சர்களின் இலாகாக்களிலும் மாற்றங்கள் நிகழவிருக்கின்றன என்றும், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் இம்மாற்றங்கள் அதிரடியாக அரங்கேறவிருக்கின்றன என்றும் உறுதியான தகவல்கள் கசிந்துள்ளன. 

இந்தப் பட்டியலில் சமூக நலன் மற்றும் மகளிர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயரே முதலாவதாக அடிபடுகிறது என்று கூறும் உள்விவரம் அறிந்தவர்கள், தனது கல்வித்தகுதி குறித்த சர்ச்சை, அரசு விழாவில், 'அமைச்சர் கீர்த்தனாவைவிட நானே சீனியர். என் பெயரைத்தான் முதலில் போட வேண்டும்' என அரசு அதிகாரிகளை கடிந்துகொண்டது, கட்சி நிர்வாகியுடனான விவகாரத்தில் வரம்பு மீறி பேசிய ஆடியோ வெளியானது, ஊர் கிணற்றை அபகரித்துக்கொண்ட புகார் என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி, த.வெ.க. அரசுக்கு தலைவலியாக இருக்கிறார் ஜெகதீஸ்வரி என்று கூறுகின்றனர். என்னதான் அவர், ஏ.ஐ. ஆடியோ, பணம் கேட்டு மிரட்டல், எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி என சமாளித்தாலும், தலைமை இவற்றை எல்லாம் ஏற்பதாக இல்லை என்று பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், த.வெ.க. அமைச்சர்களுடன் சேர்ந்து காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் என நான்கு பேர் ஹிட் லிஸ்டில் இருப்பதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டேஞ்சர் ஜோனில் தான் இருக்கிறார். போதைப்பொருளுக்கு எதிராக தவெ.க. அரசு கடுமை காட்டிவரும் நிலையில், கிரிக்கெட் மைதானத்தில் சரத்குமார் 'பவுடர்' பயன்படுத்தியாக வெளியான வீடியோவும் அதற்கு அவர் கொடுத்த 'மாத்திரை' விளக்கமும் தலைமையை கடுப்பாக்கிவிட்டது. தவிர, மாஜி அமைச்சர் மா.சு.வின் வலதுகரமான துரைராஜ் என்பவரின் உறவினர் இவர் என்பதும், தி.மு.க. மற்றும் நிழலுலக பின்புலம் அவருக்கு இருப்பதாக எழுந்திருக்கும் புகாரும் சரத்குமாருக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow