குமரன் OUT... பிக் பாஸ் வீட்டுக்குள் WILD CARD ENTRY கொடுக்கும் 3 பேர் யார்?
பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ல் ரூ.5 லட்சம் பணப்பெட்டியுடன் குமரன் வெளியேறிய நிலையில், அக்டோபர் 4-ம் தேதி 3 போட்டியாளர்கள் வைல்டு கார்டு மூலம் மீண்டும் வீட்டுக்குள் வர உள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. முந்தைய சீசன்களைக் காட்டிலும் இந்த சீசன் பல்வேறு வித்தியாசமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனில் லஷ்மி பிரியா, சாதிகா, பிருத்வி, ஜாவித், அஸ்மிதா, முத்தழகி, அவினாஷ், ஷாமா, ஜேசன், முனியம்மாள், பிளாக் பாண்டி, வினோத் பாபு, சாந்தினி தமிழரசன், சவின்யா, குமரன் தங்கராஜன், ராகவ், தன்யா, முகேஷ், அடாவடி அன்சார், ஆனந்தி என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.
இதனிடையே, லீடர் எவிக்ஷன் முறையில் வெளியேறிய லட்சுமி பிரியா, ஜாவித் மற்றும் சவின்யா ஆகிய மூவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு ஏற்கெனவே வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் மோசமாக விளையாடி வருபவர்களைத் தேர்வு செய்து, அவர்களுடன் இணைந்து போட்டியிடும் டாஸ்க் வழங்கப்பட்டது.
அதன்படி, லட்சுமி பிரியா - குமரன், சவின்யா - அஸ்மிதா, ஜாவேத் ஷெரிப் - தன்யா ஆகியோர் ஜோடிகளாக இணைக்கப்பட்டனர். இந்த ஆறு பேரில் மூன்று பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து விளையாட முடியும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வார எவிக்ஷன் பட்டியலில் இந்த ஆறு பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இதற்கிடையே, ரூ.5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு நடிகர் குமரன் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மீதமுள்ள ஐந்து போட்டியாளர்களில் மேலும் இருவர் வெளியேற்றப்பட உள்ளனர். அதேசமயம், ஏற்கெனவே வெளியேறியவர்களில் இருந்து மூன்று பேர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் மீண்டும் போட்டியில் தொடர உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான முன்னோட்டக் காட்சியில், வரும் அக்டோபர் 4-ஆம் தேதி மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து போட்டியைத் தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் அடுத்தடுத்து என்னென்ன திருப்பங்கள் அரங்கேறப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
What's Your Reaction?



