Yuvan: தென் மாவட்டம் பட புதிய இசையமைப்பாளர் யுவன் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்கே சுரேஷ்?

ஆர்கே சுரேஷ் ஹீரோவாக நடிக்கவுள்ள தென் மாவட்டம் படத்தை அவரே இயக்கவுள்ளார். இதற்கு யுவன் இசையமைக்கவுள்ளதாக வெளியான தகவல் சர்ச்சையான நிலையில், தற்போது ஆர்கே சுரேஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.

Mar 6, 2024 - 18:06
Yuvan: தென் மாவட்டம் பட புதிய இசையமைப்பாளர் யுவன் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்கே சுரேஷ்?

பாலாவின் தாரை தப்பட்டை திரைப்படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஆர்கே சுரேஷ். அதற்கு முன்பு திரைப்பட விநியோகஸ்தர், பைனான்சியர் என வலம் வந்த ஆர்கே சுரேஷ் நடிகராகவும் கவனம் ஈர்த்தார். அதேநேரம் இவரை சுற்றி பல சர்ச்சைகளும் உருவாகின. இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் ஆர்கே சுரேஷ் நடித்துள்ள காடுவெட்டி படத்தின் ட்ரெய்லர் வெளியானது. மறைந்த காடுவெட்டி குருவின் பயோபிக்காக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஆர்கே சுரேஷ் தான் ஹீரோவாக நடித்துள்ளார். 

காடுவெட்டி ட்ரெய்லரை தொடர்ந்து தனது அடுத்தப் படமாக தென் மாவட்டம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். அவரே இயக்கி நடிக்கவுள்ள இந்தப் படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதனை உடனடியாக மறுத்த யுவன், தென் மாவட்டம் படத்துக்கு நான் இசையமைக்கவில்லை என ட்வீட் செய்திருந்தார். இதற்கு ஆர்கே சுரேஷும் உடனே மிரட்டலாக ஒரு ரியாக்‌ஷன் கொடுத்திருந்தார்.

 அதாவது யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படம் ரிலீஸாகும் நேரத்தில் ஃபைனான்ஸ் பிரச்சினையை சந்தித்தது. அப்போது ஆர்கே சுரேஷ் தான் யுவனுக்கு பண உதவி செய்ததாகவும், அதற்காக இசை நிகழ்ச்சி மட்டுமின்றி ஆர்கே சுரேஷ் பேனரில் உருவாகும் ஒரு படத்துக்கு இசையமைக்கவும் யுவன் அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனை ஆர்கே சுரேஷ் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதனால் யுவன் – ஆர்கே சுரேஷ் இருவருக்கும் இடையே மோதலா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் திடீரென இந்த சம்பவம் குறித்து ட்வீட் போட்டுள்ளார் ஆர்கே சுரேஷ். அதில், அனைவருக்கும் வணக்கம் தென்மாவட்டம் திரைப்படத்தின் புதிய இசை அமைப்பாளர் விரைவில் அறிவிக்கப்படும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து யுவன் – ஆர்கே சுரேஷ் இடையேயான பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் தென் மாவட்டம் படத்தின் இசையமைப்பாளராக டி இமான் கமிட்டாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow