அரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி- காஷ்மீரில் காங். கூட்டணி ஆட்சி
அரியானாவில் மீண்டும் பாஜகவும், ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியும் ஆட்சி அமைக்க உள்ளது.
அரியானாவில் மீண்டும் பாஜகவும், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியும் அமைக்கிறது.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் சட்டமன்ற தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக கடந்த செப்.18ம் மற்றும் 25, அக்.1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி வாக்கு எண்ணிக்கையில், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி( இண்டியா கூட்டணி) ஆட்சி அமைக்கிறது. மாலை 4 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், பாஜக 29 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக் கட்சி 3 இடங்களிலும், மக்கள் மாநாட்டுக் கட்சி, ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 1 இடத்திலும், சுயேச்சை 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதன் மூலம் காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி( இண்டியா கூட்டணி) ஆட்சி அமைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல் அரியானாவில் 90 தொகுதிகளுக்கு கடந்த அக்.5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வெற்றிக்கு 46 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டிய நிலையில், ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. காலையில் தொடர்ந்து முன்னிலை வகித்த காங்கிரஸ் 10 மணிக்கு பிறகு பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
மேலும் ஆளும் பாஜக 49 தொகுதிகளிலும், காங்கிரஸ் 35 தொகுதிகளிலும், 6 இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை வகித்து வருகின்றன. இந்த நிலையில், அரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.
What's Your Reaction?