வார்னிங் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி- மீட்டிங்கில் அதிரடி காட்டியதால் அதிகாரிகள் கலக்கம்
அனைத்து அலுவலர்களும் அவர்களது செல்போனை எந்த காரணம் கொண்டு OFF செய்து வைக்கக்கூடாது.இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
அனைத்து அலுவலர்களும் அவர்களது செல்போனை எந்த காரணம் கொண்டு OFF செய்து வைக்கக்கூடாது, இதனை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின் எதிர்கொள்ள சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.ஆய்வுக் கூட்டத்தில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் சென்னை மண்டல 15 பொறுப்பு அலுவலர்கள் அனைவருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி பருவமழை எதிர்கொள்வது தொடர்பாக சில அறிவுரைகள் வழங்கினார்.
அதில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை தேங்கும் பகுதிகளில் அடையாளம் காணப்பட்டு அனைத்து தாழ்நிலையிலான பில்லர் பாக்ஸர்கள் தரைமட்டத்திற்கு மேல் ஒரு மீட்டர் உயரம் நிறுவும் பணிகள் உடனடியாக முடிக்க வேண்டும் எனவும் பில்லர் பாக்ஸ்கள் அனைத்து உரிய முறையில் பராமரிக்கப்படுவதை அந்தந்த பகுதிகள் சார்ந்த பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தேனாம்பேட்டை பகுதியில் அடையாளம் காணப்பட்ட தாழ்வு நிலையிலான பில்லர் பாக்ஸ்கள் உடனடியாக உயர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் மழை காலங்களில் அனைத்து அலுவலர்களும் அவர்களது அலைபேசியை எந்த காரணம் கொண்டு OFF செய்து வைக்கக்கூடாது, இதனை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அனைத்து பொறியாளர்கள் உதவி பொறியாளர்களுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்தார்.இதனால் மீட்டிங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?