தவெக மாநாட்டின் பூமி பூஜை... தேதி அறிவித்த புஸ்ஸி ஆனந்த்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் பூமி பூஜையின் தேதியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். 

Oct 2, 2024 - 13:07
தவெக மாநாட்டின் பூமி பூஜை... தேதி அறிவித்த புஸ்ஸி ஆனந்த்..!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்களில் அமைந்துள்ளது. கொடியின் நடுவில் வாகை மலரும், 28 நட்சத்திரங்களும், மேலும் அதனை இரண்டு யானைகள் வணங்குவது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளன. கொடி அறிமுகப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே கொடியில் யானையை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு அது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. அதில், தவெக கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம், பகுஜன் சமாஜ் கட்சிக்குச் சொந்தமானது எனவும், சட்டப்படி அதைப் பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், விரைவிலேயே தவெக மாநாடும் நடைபெற உள்ளது. கோட் படத்தின் ரிலீஸுக்கு எந்த சிக்கலும் வரக் கூடாது என காத்திருந்த அவர், செப்டம்பர் 23ம் தேதி மாநாடு நடத்தலாம் என முடிவு செய்திருந்தார். ஆனால், போலீஸார் தரப்பில் இருந்து அனுமதி கிடைக்காததால், மாநாடு தேதி அக்டோபர் 27ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.      

இதற்கான அனுமதியை விழுப்புரம் மாவட்ட காவல்துறை வழங்கியது. முன்னதாக தவெகவுக்கு 16 கேள்விகள் கேட்டிருந்த போலீஸார், மாநாடு நடக்க வேண்டும் என்றால் 33 நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தனர். இந்த 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக புதிய மாநாட்டு தேதிக்கும் போலீஸார் தரப்பில் அனுமதி கொடுக்கப்படவில்லை என சொல்லப்பட்டது. இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் விளக்கம் கொடுத்திருந்தார். தமிழக வெற்றிக் கழக மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடத்துவதற்கு, 33 நிபந்தனைகளில் கட்டாயம் 17 நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டுமென விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான பூஜை செப்டம்பர் 04 ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பூமி பூஜைக்கான தேதி வெளியாகி உள்ளது. தற்போது மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பூமி பூஜை போட்ட பிறகு மாநாட்டு திடலில் பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என தகவல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow