Uncapped Player ஆகிறாரா தோனி? – சிஎஸ்கே செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்!
தோனியை அன்கேப்ட் வீரராக தக்கவைப்பது குறித்து தற்போது முடிவு எடுக்க முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் புகழ் பரவியுள்ளது என்றே சொல்லலாம். கோடிக்கணக்கான மக்கள் இந்தப் போட்டிகளை கண்டு ரசித்து வரும் நிலையில், ஐபிஎல் 18-வது சீசன் போட்டிகள் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ளன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல் தொடருக்கான புதிய ஏல விதிமுறைகளை பி.சி.சி.ஐ. வெளியிட்டது. அதில் அன்கேப்ட் வீரர் என்ற விதிமுறையை பி.சி.சி.ஐ. மீண்டும் கொண்டு வந்துள்ளது.
இந்த விதி கொண்டுவரப்பட்டதில் இருந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தோனி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த நிலையில், தோனியை அன்கேப்ட் வீரராக தக்கவைப்பது குறித்து பதிலளித்துள்ளார் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”தோனியை அன்கேப்ட் வீரராக தக்கவைப்பது குறித்து எங்களால் தற்போது முடிவு எடுக்க முடியாது. இன்னும் சில நாட்களில் நான் அவரை சந்திக்க இருக்கிறேன். அதன் பின்னர் முடிவு கிடைக்கும்” என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
What's Your Reaction?