Good Bad Ugly: அஜித்தோட குட் பேட் அக்லி தெரியாதா? ChatGPT அளித்த அதிர்ச்சி பதில்!
ChatGPT-யிடம் (சாட் ஜிபிடி) அஜித்குமாரின் GOOD BAD UGLY (குட் பேட் அக்லி) பற்றி கூறு எனக் கேட்டதற்கு அப்படி எந்த படமும் இல்லை என பதிலளித்து அதிர்ச்சியளித்துள்ளது சாட் ஜிபிடி.

அஜித், த்ரிஷா, சிம்ரன் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்றும், கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஏராளமான மாஸ் தருணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அண்மையில் நேர்காணல் ஒன்றில் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.
குட் பேட் அக்லி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்றுள்ள 2 பாடல்களும் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பினை தூண்டியுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு குட் பேட் அக்லி- படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியிடப்பட்டது. இதற்கு தான் ராசா காத்திருந்தோம்..அஜித்தை இப்படி பார்த்து எவ்வளவு நாளாச்சு.. என அஜித் ரசிகர்கள்
டிரைலரை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
குட் பேட் அக்லி: அப்படியொரு படமிருக்கா?
இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து ஒரு பயனர் சாட் ஜிபிடி-யிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அப்படியொரு படமே இல்லை. வேண்டுமானால், அஜித் “good character"-ல் நடித்த படங்கள் வீரம், வேதாள, என்னை அறிந்தால் எனவும், "Bad character"-ல் நடித்த படங்கள் மங்காத்தா, பில்லா, வாலி எனவும், ”Ugly (Ruthless Ajith Villain Role)”- ல் அஜித் நடித்த படங்கள் வாலி, வில்லன் எனவும் பட்டியல் போட்டுள்ளது.
பதிலை கண்டு அதிர்ச்சியடைந்த பயனர், திரும்ப செக் பண்ணு என சாட் ஜிபிடிக்கு ஆணையிட.. “மேலே சொன்ன பதிலுக்கு சாரி பாஸ்” .. இந்தாங்க பதில்னு குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து தகவலை தந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் “கிப்லி” ஆர்ட் கேட்டு பயனர்கள் குவிந்ததால் சாட் ஜிபிடி திக்குமுக்காடி போனது. அதிலிருந்தே ஒரு குதார்க்கமாக தான் கேட்கும் கேள்விகளுக்கு சாட் ஜிபிடி பதில் தருவதாக பல பயனர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
What's Your Reaction?






