ஏப்ரல் இறுதிக்குள் தங்கவிலை இந்த உச்சத்தை எட்டும்... தங்க வியாபாரிகளின் அதிரடி கணிப்பு !!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ள நிலையில், ஏப்ரல் இறுதிக்குள் தங்க விலை கடுமையா உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Mar 2, 2024 - 11:29
ஏப்ரல் இறுதிக்குள் தங்கவிலை இந்த உச்சத்தை எட்டும்... தங்க வியாபாரிகளின் அதிரடி கணிப்பு !!

கடந்த பிப்ரவரி 25ம் தேதிக்குப் பிறகு தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் தங்க விலையானது கடந்த 3 நாட்களாக அதிகரித்த வண்ணம் இருந்தது. நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,760க்கு விற்பனையானது. அதேபோல் கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.5,840க்கு விற்பனையானது. மாதத்தின் தொடக்கத்திலேயே சவரனுக்கு ரூ.200 உயர்ந்து விற்கப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.47,520 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.5,940 ஆக விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் 80 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.77-க்கு விற்பனையாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000க்கு விற்கப்படுகிறது. 

இந்நிலையில் ஒரே நாளில் சவரனுக்கு 800 ரூபாய் தங்க விலை உயர்ந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து வரும் நிதியாண்டுக்குள் தங்க விலை கிராமுக்கு ரூ.6,000ஐ தாண்டும் என மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் அசோசியேசன் பொதுசெயலாளர் சாந்தகுமார் தகவல் தெரிவித்துள்ளார். தங்க விலை சவரனுக்கு ரூ.50,000ஐ நெருங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow