15 வயது சிறுமி கொலை வழக்கு - தாய் மற்றும் உறவினர்களிடம் விசாரணை

15 வயது சிறுமி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் சென்று உயிரிழந்த சிறுமியின் தாயிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

Nov 4, 2024 - 21:38
Nov 5, 2024 - 02:24
15 வயது சிறுமி கொலை வழக்கு - தாய் மற்றும் உறவினர்களிடம் விசாரணை

அமைந்த கரையில் வீட்டில் பணிபுரிந்த 15 வயது சிறுமியை வீட்டின் உரிமையாளர் முகமது நிஷாத் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து அடித்து கொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக அமைந்தகரை போலீசார் முகமது நிஷாத் அவரது மனைவி நாசியா நண்பர்கள் ஆன லோகேஷ் மற்றும் அவரது மனைவி ஜெயசக்தி, வேலைக்கார பெண் மகேஸ்வரி முகமது நிஷாத்தின் சகோதரி சீமா பேகம் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமியை கடந்த மூன்று மாதங்களாக சூடு வைத்து சித்ரவதை செய்து கொடூரமாக தாக்கி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரா? என பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சிறுமியின் தாய் மற்றும் அவரது உறவினர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு பதிவு செய்துள்ளனர்.

மேலும் போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் காவல்துறையின் எஃப்.ஐ.ஆர் மற்றும் தகவல்களைப் பெற்று குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையின் விசாரணை அறிக்கை பெற்று அடுத்த கட்ட விசாரணையில் ஈடுபட இருப்பதாகவும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்று தரவும், உரிய விசாரணை நடைபெறுகிறதா எனவும் விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சமூக பாதுகாப்பு துறை இயக்குனரிடம் வழங்குவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow